என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்ற"
- சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது
- அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்
ஈரோடு
அரசால் தடை செய்ய ப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி பெருந்துறை போலீசார் நேற்று தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுப ட்டிருந்தனர்.
அப்போது சிப்காட், 2-வது கிராசில் உள்ள கேஸ் கம்பெனி அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்ற போது, அவர்களைக் கண்ட தும் தப்பியோட முயன்ற ஒரு நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் பீகார் மாநி லம், பால்தியா மாவட்டம், கோதை பாஹ் பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் மன்சூரி (வயது 21) என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனை யில், அவர் 150 கிராம் கஞ்சா வைத்திரு ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த ரூ. 1,500 மதி ப்பிலான 150 கிராம் கஞ்சா வையும் பறிமுதல் செய்தனர்.
- கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
- 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ரெயிலில்...
விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கைது
சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஆப்பக்கூடல், ஈரோடு டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.
அப்போது ஈரோடு-கொடுமுடி ரோடு, ஆப்ப க்கூடல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட கஞ்சா எனும் போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் கட ம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 22), நாம க்கல் மாவட்டம் குமாரபா ளையம் ஆனந்தராஜ், மர ப்பாலம் சண்முகம் மகன் தமிழ்ச்செல்வன் (31), வெண்டிபாளையம் நடராஜன் மகன் கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 52.1 கிலோ கஞ்சா எனும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
- கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
பெருந்துறை பங்களா வீதி பவானி சாலை அண்ணா சிலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் வீதியை சேர்ந்த மோகன வசந்த் (22), அதேபகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பது தெரியவந்தது.
அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆப்பக்கூடல் புன்னம் செங்கோம்பாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக செதுனாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (48) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
- அவரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள மாரியப்பா நகர் என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவரை விசாரித்த போது அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் (30) என தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள செல்போன் கடை ஒன்றின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கவுதம் (29) என்பதும், தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.1,200 மதிப்பிலான 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
- கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாணிக்கம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் மாணிக்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த கதிர்வேல் (23), கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட, அதிக போதை தரும் கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அக்ரஹாரம் டாஸ்மாக் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மரப்பாளையத்தை சேர்ந்த தனுஷ்கோடி மகன் ஆனந்த் என்ற ஆன ந்தகுமார் (வயது 38),
வாணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்த னர்.
பின்னர் அவர்கள் வை த்திருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஈரோடு கிரு ஷ்ணம்பாளையம் பகுதியில் போதை பொருள் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன் (47) என்ப வரை கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவரி டமிருந்து போதை பொரு ட்களை போலீசார் பறிமு தல் செய்து செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கஞ்சா விற்று கொண்டிருந்த இந்திரன் என்பவரை கைது செய்தார்.
- கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பூந்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு திருட்டுத்தனமாக கஞ்சா விற்று கொண்டிருந்த ஓடைப்பள்ளம் அண்ணாத்துரை மகன் இந்திரன் (வயது 23) என்பவரை கைது செய்தார்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் திரு.வி.க. நகர் டாஸ்மாக் அருகே உள்ள பொது இடத்தில் சூரம்பட்டிவலசு சதீஷ்குமார் (48), அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் (23) ஆகியோர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.வி.சி.ஆர். நகர், அய்யனாரப்பன் கோவில் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தீனா (21), கருங்கல்பாளையத்தை சேர்ந்த முகேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பிரவீன்குமார் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் போலீசார் குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் திருமலை தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அக்பர் அலி (55) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.