search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storing it at home"

    • அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மொடக் குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தி னர். அப்போது ராசாம் பாளையம் பகுதியில் 2 பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் போலீசை கண்ட தும் தப்பி ஓடினர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த அஜீத் (22), ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா (29) என்பதும் அவர்கள் வீட்டில் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து ராசாம்பாளையத்தில் உள்ள பாலாவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல் நேரில் சென்று விசாரனை நடத்தி னார்.

    இதில் லாரி டிரைவரான பாலா முகாசி அனுமன் பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவர் மூலம் கஞ்சா வாங்கி ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, லக்காபுரம், 4 6புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அஜீத், பாலா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கணேசன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர்.

    ×