search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 arrested"

    சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.

    இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.
    • 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.

    அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் வைத்து சூதாடி கொண்டு இருந்த போகம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 23), பல்லடம் தாலுகா சுக்கம்பாளையத்தை சேர்ந்த கோபால்(33), தேகாணியை சேர்ந்த சரண்(20), சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாயவன் (54) என்பவர் இந்த வழியாக ஏன் வந்தாய் என கேட்டுள்ளார். இதில் மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே மனோஜ் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (18), கொமராபாளையத்தை சேர்ந்த தீபன்ராஜ் (28), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (32) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேருடன் சேர்ந்து மாயவனையும் அவருக்கு ஆதரவாக தட்டிக் கேட்ட கிருஷ்ணன் (42), வரதம்மாள்(60), ராசாயி (60) ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணன், அவரது உறவினர்களை தாக்கிய மனோஜ், ஈஸ்வரன், தீபன்ராஜ், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த தகராறில் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து மாயமாகி விடடார். தலைமறைவான அந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு, 

    ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில், அவர்கள், கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • இளநீர் வாங்குவது போல் நடித்து மாணவரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 220 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி முத்தழகன் மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த மேலூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 24), மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் என்.புதுப்பட்டியிலிருந்து லத்துவாடி செல்லும் சாலையில் அவரது அண்ணன் சதீஷ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது குரும்பர் தெரு வேகத்தடை அருகே வந்தபோது எதிரே வந்தவர்கள் இவர்களைப் பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட தினேஷ்குமாரை, சதீஷ் ஆகியோரை எதிர் தரப்பினர் அடித்து, உதைத்து, காயப்படுத்தினர்.

      வலி தாங்க முடியாமல் அவர்கள் இருவரும் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து, இருவரையும் தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த தினேஷ்குமார், சதீஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      மேலும் இதுகுறித்து தினேஷ்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

      இதில் தினேஷ்குமார், சதீஷை தாக்கிய வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த உதயசூரியன் மகன் சரவணன் (29), குமார் மகன் விஜய் (20), லோகநாதன் மகன் சதீஷ்குமார் (29), கருப்பையா மகன் சத்தியசீலன் (28), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

      • மாயவன் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
      • கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார்.

      கள்ளக்குறிச்சி:

      சங்கராபுரம் அருகே ராவுத்தநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்தவர் மாயவன் (வயது50). அவர் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடை ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார். பதிலுக்கு மாயவன் தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவன், சக்திவேல், எம்.ஜி., சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலை மறைவான தனஞ்செழியன், பிரகலாதன், வீரமணி, மணி, சவுந்தர், தனுசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காக போ லீசார் குவிக்கப்ப ட்டுள்ளனர்.

      • லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
      • லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      கோவை,

      கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

      சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி இருக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

      இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாலிபர்கள் திருஞானசண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

      இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிராஜிஸ் (21), சிஜி (25), ராஜேஷ் (30), திணேஷ் (25) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

      • மதுரை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
      • விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது.

      மதுரை

      மதுரை திலகர் திடல் போலீசார் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த பாசிங்காபுரம் காளியம்மன் கோவில் தெரு, பழனிவேல் மகன் பிரதீப் என்ற சுருட்டை (21), விளாங்குடி, டெம்சி காலனி மணி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

      மதுரை திருப்பரங்குன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் என்ற தமிழ் (வயது21). திருநகர், இலகுவனார் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற சிவபிரியன் (28). இவர்கள் 2பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்தது. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி தமிழரசன் என்ற தமிழ், சிவா என்ற சிவப்ரியன் ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். 

      • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
      • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

      கள்ளக்குறிச்சி:

      கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

      இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

      மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

      • ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
      • திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

      ஈரோடு,

      ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

      விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.

      மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

      இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

      இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

      அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

      மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

      மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

      • கடந்த 23-ந் தேதி இரவு ஆகாஷ் டேவிட் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.
      • காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

      ஊட்டி,

      ஊட்டி அருகே உள்ள கேத்தி சாந்தூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் டேவிட் (வயது 26). இவர் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

      கடந்த 23-ந் தேதி இரவு இவர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் வீட்டு முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

      அதன்பின்னர் ஊர்க்காவல் படை காவலரான ஆகாஷ் டேவிட், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களான ஜிசாந்த் (26), ஆரோக்கியசாமி (36), சத்தியசீலன் ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் ஆகாஷ் டேவிட்டையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்கினர்.

      இதில் காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

      ×