என் மலர்

  நீங்கள் தேடியது "5 people arrested"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டினர்
  • வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்

  வேலூர்:

  வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே உள்ள சந்தன கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47) முன்னாள் ராணுவ வீரர்.

  நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே நின்றிருந்த பூங்காவனத்தை தேடி 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.

  அவர்கள் அருகே கிடந்த மூங்கில் குச்சிகளை எடுத்து பூங்காவனத்தின் தலையில் தாக்கினர். தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்தனர். அவர் கீழே விழுந்தபோதும் தாக்கியுள்ளனர்.

  இதில் பூங்காவனம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

  மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவரது மனைவிக்கும் கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாதுரை (56) ராஜசேகர் (31) ஜெகதீஷ் (30) ஜெயவேல் (57) ஆகியோர் சேர்ந்து பூங்காவனத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

  அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுராஜ் (24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • சுரேஷ் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டு பைக்கில் திரும்பி வந்த போது அவரை சம்பத் என்பவர் மிரட்டி பணம் பறித்து தப்பியோடினார்.

  திருச்சி :

  திருச்சி பாலக்கரை சங்கலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் மணல் வாரித்துறை பகுதியில் உள்ள மதுபான கடையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பதவன்று மதுபான கடைக்கு ரவிச்சந்திரன் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஜேசுராஜ் (24) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  இதேபோன்று திருச்சி சிந்தாமணி அண்ணாநகர் புதிய சேர்ந்தவர் செல்வம் (32), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சங்கரன் பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்த முரளி குமார் (21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார். இது தொடர்பாக செல்வம் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய முரளி குமாரை கைது செய்தனர்.

  திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32). சம்பவத்தன்று இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனது மனைவியை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவரை வழிமறித்து திருச்சி பாலக்கரை காஜா பேட்டை பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் (32)என்பவர் கத்தியை காட்டிய மிரட்டி சுரேஷிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

  இதையடுத்து பொதுமக்கள் அவரை உடனடியாக பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் ராஜா கைது செய்துள்ளனர்.

  இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் சகாய குமார் (44). ஆட்டோ டிரைவரான இவர் இவரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்த மணிகண்டம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மகேந்திரன் (21) சத்யா (21) ஆகிய 2 பேரையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள், போதை மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன.
  • தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிபட்டி:

  தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள், போதை மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னமனூரில் போதை மருந்து, ஊசி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

  மேலும் இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த திருச்சியை சேர்ந்த வியாபாரி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த உதவியாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

  ஆண்டிபட்டி சீனிவாசாநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் சுற்றித்திரிந்தனர்.

  போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரையில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட தினேஷ்(23), சந்தானமுத்து(25), வைரம்(28), கார்த்திகேயன்(22), நம்பிராஜ்(20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கடலூர்:

  கடலூர் கெடிலம் ஆறு பகுதியில் ஒரு கும்பல் சந்தேகம் படும்படியாக இருப்பதாக கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, குருமூர்த்தி, மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 5 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்

  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதில் கடலூர் குப்பன் குளம் சேர்ந்தவர்கள் ஜீவா (வயது 22), மதன்குமார் (18), நவீன்ராஜ் (வயது 20) மற்றும் புதுப்பாளையம் குப்பன் குளம் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது‌. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பிரபல ரவுடி வீரா என்பவரை கொலை செய்த ஒரு கும்பலை கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த கொலை வழக்கு முன் விரோத தொடர்பாக கிருஷ்ணன் மனைவி காந்திமதி என்பவரை ஒரு கும்பல் கடந்த 2021 -ஆம் ஆண்டு கொலை செய்தனர். இந்த வழக்குகளில் ஜீவா, மதன் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி வீரா என்பவரின் தந்தை கனகராஜ் என்பவரை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட வீரா வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மீண்டும் இந்த கும்பல் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சக்தி என்பவரும் மேற்கண்ட கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

  இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அய்யலூர் குறிஞ்சிநகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக புகார் எழுந்தது.
  • ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர்.

  வடமதுரை:

  அய்யலூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது28).

  மீனாட்சியூரை சேர்ந்தவர் பள்ளிக்கூடத்தான் (35), பாலகுறிச்சியை சேர்ந்த சின்னச்சாமி (65), வைரபிள்ளைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் (55), குப்பம்பட்டியை சேர்ந்த பெருமாள் (55). இவர்கள் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்தி ருந்தனர்.

  ரோந்துசென்ற வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் 5 பேரை கைது செய்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்விரோத்தில் வியாபாரியை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இச்சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் ராமர்பி ள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது36). காய்கறி வியாபாரி. இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் இவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இது குறித்து நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாரை கத்தியால் குத்திய மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது 28), தோட்டனூத்தை சேர்ந்த கார்த்திகேயன் (25), ஜம்புளியம்பட்டியை சேர்ந்த மாதவன் (28), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

  முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் குத்தியதாக அவர்கள் தெரிவித்து ள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • கஞசா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் அறிவுறுத்தலின்படி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அனுமந்தராயன் கோட்டை மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது மேலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் அவர்கள் மேலப்பட்டியை சேர்ந்த ரோஸி (வயது 46), பீட்டர் (38), பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (21), செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (22), காந்திநகர் காலனியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக அவர்களுக்குள் பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது.

  இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலப்பட்டியைச் சேர்ந்த ஜான், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஞ்சூர் அருகே மான்கறி சமைத்த 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மஞ்சூர்:

  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கிட்டட்டிமட்டம் வனப்பகுதியில் மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.

  இந்த வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து வன அலுவலர் குருசாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார், குந்தா, வனச்சரகர் சரவணன், வனவர்கள் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோர் கிட்டப்பட்டிமட்டம் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

  அப்போது வனப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் மான் கறி சமைத்துக்கொண்டிருந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் பெள்ளத்திகம்பை சேர்ந்த சரவணன் (வயது 27), ரங்கசாமி (40), நாகேஷ் (39), ரமேஷ் (36), கிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது.

  மேலும் வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த மான்பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்தது. இதனையறிந்த நாங்கள் வனப்பகுதியில் கிடந்த மானின் உடலை சமைப்பதற்காக கூறுபோட்டோம் என கூறியுள்ளனர்.

  அவர்கள் 5 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மானின் இறைச்சி, கால்கள், தலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மான் வேட்டையில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் கருப்பூர் அருகே அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கருப்பூர்:

  சேலம் கருப்பூரை அடுத்த பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் தைலம்மாள் (வயது 70). இவர் உள்பட கட்டுவளவு பகுதியை சேர்ந்த மல்லிகா (55), கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சாந்தா (50), கந்தசாமி (60), சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன்(32) ஆகியோர் அரசு அனுமதியின்றி சந்துக்கடை வைத்து நடத்தியதாக தெரிகிறது.

  இதை அறிந்த கருப்பூர் போலீசார், பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் அரசு அனுமதிஇன்றி சந்துக்கடை வைத்து நடத்திய அவர்கள் 5 பேரையும் கருப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews

  ×