search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் ஓட்டல் உரிமையாளரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் ஓட்டல் உரிமையாளரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்

    • வாலிபர் ரெங்கநாதபுரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • கொலை சம்பந்தமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள செல்லமந்தாடி ரோடு ஓடைபட்டியை சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தசுதன் (23). 10ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை இறந்துவிடவே தாய் சிவகாமி (45). அறிவுத்திரு க்கோவில் பைபாஸ் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று இரவு ரெங்கநாத புரம் மலைக்கோவில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தசுதன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து டி.எஸ்.பி. உதயகுமார் மேற்பார்வை யில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தாடி க்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலையில் ஈடுபட்ட லட்சுமிநகரை சேர்ந்த முரளிராஜா (35), குடைபாறைப்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (32), கே.கே.நகரை சேர்ந்த இன்னாசி ஸ்டீபன் (31), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின் ஸ்டீபன் (28), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தியதில் திடுக்கி டும் தகவல்கள் வெளி யானது. அறிவுத்தி ருக்கோ வில் அருகே முரளிராஜா என்பவர் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 மாதமாக கடையை பூட்டிவிட்டார். இந்நிலையில் கடையில் வேலை பார்த்த ஆனந்தசுதனின் தாய் சிவகாமி இடத்து உரிமை யாளரிடம் தாங்கள் கடையை நடத்துவதாக கேட்டுள்ளனர். அவரும் சம்மதிக்கவே ஆனந்த் மெஸ் என்ற பெயரில் ஒருவாரமாக கடை நடத்தி வந்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் ஏற்கனவே முரளிராஜா விடம் கடன் கொடுத்தவர்கள் கடைக்கு தேடி வந்துள்ளனர். அவர்களிடம் ஆனந்தசுதன் தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், தற்போது கடையை தானே நடத்து வதாகவும் கூறியுள்ளார். மேலும் முரளிராஜாவின் வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனால் கடன் காரர்கள் தினந்தோ றும் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அவரது தினசரி நட வடி க்கைகளை கண்காணித்து நேற்று இரவு கடைமுடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முரளிராஜா தீர்த்துக்கட்டியுள்ளார்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய கல்லுப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அவரையும் போலீசார் தேடி வருகின்ற னர்.

    Next Story
    ×