என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் போதைப்பொருள் பதுக்கிய 5 பேர் கைது
    X

    கோவையில் போதைப்பொருள் பதுக்கிய 5 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர்களை போலீசார் சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருந்தது.
    • போலீசார் 5 பேரையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை, -

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 கிராம் போதைப் பொருளை மறைத்து வைத்து இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருளை வைத்து இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் அசருள் இஸ்லாம் (வயது 22), அப்துல் முத்தலீப் (37) என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    சூலூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்வந்தது. இதனையடுத்து சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த தேனி அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி (24), திண்டுக்கல்லை சேர்ந்த தமிழரசன் (25), திருப்பூரை சேர்ந்த சிமோன்ராஜ் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×