சட்டவிரோத மது விற்பனை; 5 பேர் கைது

சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனை; 5 பேர் கைது
Published on

ஈரோடு:

சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு தாலு கா, தாளவாடி, அம்மாபே ட்டை, அந்தியூர், கடம்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போ து அரசு மதுபா னத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்து அதிக விலை க்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, ஈரோடு, மேட்டுக்கடையை சேர்ந்த நாகராஜ் (45), தாள வாடி நேரு நகரைச் சேர்ந்த ஆரோ க்கியசாமி (47), அந்தி யூர், கண்ணப்ப–ள்ளியைச் சேர்ந்த செந்தில் (42), அந்தி யூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த தர்மராஜ் (19), அந்தியூரைச் சேர்ந்த சின்னக்கண்ணன் (55) ஆகிய 5 பேரைக் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com