என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரண்"

    • அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
    • தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளனர்.

    சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் தண்டேவாடா மாவட்டத்தில் 37 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர்.

    தண்டேவாடாவில் உள்ள டிஆர்ஜி அலுவலகத்தில் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.

    அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.

    கடந்த 20 மாதங்களில் தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசின் மறுவாழ்வு திட்டத்தின்படி, சரணடைபவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும், திறன் மேம்பாடு மற்றும் விவசாய நிலத்தில் பயிற்சி போன்ற சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.

    இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் வரும் 28ம் தேதி(வெள்ளிக்கிழமை) ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட படத்தின் புதிய டிரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    சமீபமாக கார் ரெஸிங்கில் அஜித் பிஸியாக உள்ளார். அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அட்டகாசம் ரீரிலீஸ் ரிலீஸ் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
    • நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.

    சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.

    அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

     2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.

    பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.

    • நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.

    இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 



    • தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
    • ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதாக அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் படத்தை ரீரிலீஸ் செய்கிறார்.

    கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    தற்போது கார் ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.  

    • இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்றது ‘இவன் தந்திரன்’ திரைப்படம்
    • இப்படத்தை மசாலா பிக்ஸ் (MASALA PIX) நிறுவனம் தயாரிக்கிறது.

    இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் 'ஜெயம் கொண்டான்' படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, 'கண்டேன் காதலை', 'இவன் தந்திரன்', 'பூமராங்', 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பல கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

    இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள #காந்தாரி படத்தை தயாரித்து இயக்கிய படத்தை இம்மாதம்  வெளியிட திட்டமிட்டுள்ளார்.

    மேலும், இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற 'இவன் தந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது 'இவன் தந்திரன்-2' என்கிற பெயரில் தயாரித்து இயக்குகிறார்.

    இப்படத்தை மசாலா பிக்ஸ் (MASALA PIX) நிறுவனம் தயாரிக்கிறது.

    'இவன் தந்திரன்' படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்திருந்தனர். பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு மோசமான அமைச்சரின் துணையோடு நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது.

    மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு, சிறந்த விமர்சனங்களையும் பெற்று

    அதன் தொடர்ச்சியாக உருவாகும் 'இவன் தந்திரன் 2' வும், அதே விறுவிறுப்பான திரைக்கதையும் கதை களமும் அமைந்துள்ளது. தனது வேலையில் உறுதியாக இருக்கும் ஒருவன் அதை நிறைவேற்ற அவன் என்னைன்ன செய்கிறான் என்பதே இன்றைய இளைஞர்களுக்கான கதையாக அமைந்துள்ளது.

    'சிங்கம் 3;, 'வடசென்னை', 'கேஜிஎப்' உள்ளிட்ட படங்களில் இளம் நடிகராக நடித்து பிரபலமான நடிகர் சரண் நாயகனாக நடிக்கிறார். கல்லூரி மாணவரான சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

    'இந்தியன் 3', 'இரு துருவம்', விரைவில் வெளியாக இருக்கும் 'காளியன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிந்து பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயம் ரவியின் கராத்தே பாபு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

    சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    தெலுங்கில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் எஸ்.எஸ்..தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

    தற்போது 'இவன் தந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார்.
    • கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மாநகர பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் பிரச்சனை ஏற்படவே சரண்யா 2-வது கணவரிடம் இருந்து பிரிந்தார்.

    பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 3-வதாக சரண்யா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மதியம் சரணடைந்தனர்.

    கொலையுண்ட சரண்யாவின் கணவர் பாலன் மகன் கபிலன் ஆவார். இவருக்கு சொத்துக்களை பிரித்து தர சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரோதத்தில் சரண்யா கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • தலைவாசல் அருகே சத்துணவு பெண் ஊழியர் கொலையில் 6 மாதத்துக்கு பின் 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    • சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி (வயது 49) என்பவரிடம் 6½ ஏக்கர் நிலம் வாங்க வெங்கடாசலம் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக ரூ.82 லட்சம் விலை பேசி ரூ.21 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் ராமசாமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்து அட்வான்ஸ் தொகையை வெங்கடாசலத்திடம் திரும்ப கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி இரவு ராமசாமி, அவருடைய அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் பூவாயி (66) மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் பூவாயி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு குறித்து தலைவாசல் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பூவாயி கொலை வழக்கு சம்பந்தமாக தென்குமரை பகுதியை சேர்ந்த வரதன் (வயது 30), முருகேசன் (35), கோபால் (28) ஆகிய 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • கோவையில் ரவுடி சுட்டு கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

    கோவை,

    மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சத்திய பாண்டி (வயது 32). இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை வழக்கில் சத்திய பாண்டி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இவருக்கும் மற்றொரு கூலிப்படையை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சத்தியபாண்டி கடந்த 12-ந் தேதி ஆவாரம்பாளையம் ேராட்டில் ஒரு கும்பலால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஞ்சய் தலைமையிலான கும்பல் சத்திய பாண்டி னை கொலை செய்தது தெரிய வந்தது.

    கொலை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை கும்பலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி சரணடைந்த 4 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    சரணடைந்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி கோவை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசில் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    • அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பரத்வாஜ்.
    • இப்படம் குறித்து பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். இயக்குனர் சரண் இயக்கியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அஜித்தின் திரைப்பயணத்தில் காதல் மன்னன் திரைப்படம் ஒரு மையில் கல்லாக அமைந்தது. இதனை தொடர்ந்து சரணின் பல படங்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருக்கிறார். அதன்பின்னர் சரண்-அஜித்-பரத்வாஜ் கூட்டணியில் வெளியான அமர்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட படங்கள் வெளியாகி திரையுலகில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தவிர்க்க முடியாத கூட்டணியாக மாறியது.

     

    காதல் மன்னன்

    காதல் மன்னன்


    இந்நிலையில் காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை இசையமைப்பாளர் பரத்வாஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை என்னால் நம்ப முடியவில்லை! தமிழில் எனது முதல் படம், அஜித்குமாருக்கு எனது முதல் படம். மேலும் A (அஜித்) - B (பரத்வாஜ்) - C (சரண்) மூவரின் கூட்டணி. உன்னை பார்த்த பின்பு நான்.. கொண்டாடிய அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

    • சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’.
    • இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெமினி'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்று வரை முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. அதிலும், 'ஓ போடு' பாடல் இடம்பெறாத இசை நிகழ்ச்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது.


    இந்நிலையில், ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளாகியுள்ளதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×