என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி
  X

  ஆண்டிப்பட்டி அருகே அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே சொத்து கேட்டு மிரட்டிய அண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள முறுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு பட்டுராஜன் (வயது26), சவுந்தர்ராஜன் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆக வில்லை.

  பட்டுராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தனது சேர வேண்டிய சொத்தை பிரித்து எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார்.

  நேற்று மாலை வழக்கம் போல் போதையில் வந்த பட்டுராஜன் சொத்து கேட்டு தனது தாயிடம் தகராறு செய்தார். சொத்தை எழுதி தராவிட்டால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டினார்.

  பின்னர் வீட்டு திண்ணையில் தூங்கி விட்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜனிடம் தாய் நடந்த விபரங்களை கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர் தூங்கிக் கொண்டு இருந்த தனது அண்ணன் பட்டு ராஜன் தலையில் கல்லைப் போட்டார். பலத்த காயங்களுடன் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

  ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

  Next Story
  ×