என் மலர்

  நீங்கள் தேடியது "Thirumangalam murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  பேரையூர்:

  திருமங்கலம் அருகே உள்ள கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவருக்கு நாகராஜ் (வயது 45), செந்தில் நாயகன் (43), ஞானேஸ்வரன் (40) என 3 மகன்கள் உள்ளனர். 3 மாடிகள் கொண்ட வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் வசித்தனர்.

  கடந்த 2014-ம் ஆண்டு தனது சொத்துக்களை 3 மகன்களுக்கும் வெள்ளைச்சாமி உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்த நிலையில் உயில் விவகாரம் தெரியவந்தது. அதில் மற்றவர்களை விட செந்தில் நாயகனுக்கு அதிக அளவில் சொத்துக்களை வெள்ளைச்சாமி பிரித்து எழுதி இருந்தார். இது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

  இந்த நிலையில் செந்தில் நாயகன் தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றும் பணியில் ஈடுபட்டார். இது நாகராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

  நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டில் செந்தில் நாயகன் படுத்திருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டில் இருந்த அம்மிக்குழவிக்கல்லை எடுத்து செந்தில் நாயகன் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

  கொலை செய்யப்பட்ட செந்தில்நாயகன், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  ×