என் மலர்
நீங்கள் தேடியது "women murder"
- காவ்யா, அஜித் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
- காவியாவுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.
இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் (26) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா வீடியோ காலில் பேசினார்.
அப்போது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தார். இதனைப் பார்த்து அஜித்குமார் கடும் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம்.
என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார்.
இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம் எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த வழியாக சென்ற ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தனது மனைவியின் நடத்தையில் அகிலன் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்(வயது 38). மீனவர். இவரது மனைவி ரேஷ்மி(31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கொலை
இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அகிலன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் ரேஷ்மி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்று மதியம் சமாதானப்படுத்தி மீண்டும் ரேஷ்மியை கணவர் வீட்டில் அவரது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர். மாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக உவரி போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தர வின்பேரில் தலைமறைவான அகிலனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர்.
- நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கொலை
இந்நிலையில் நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் பின்வாசலில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகைகள் கொள்ளை
முத்துலட்சுமி கழுத்தில் வெட்டப்பட்டும், 2 விரல்கள் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் நகை, அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீடுகளிலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
- கடந்த 30-ந்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணி உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார்.
- புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் என்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி ராணி (வயது 47). இவர்களது மகன் கருணாமூர்த்தி. இவர், கடலூர் பாலூர் பகுதியை சேர்ந்த சுவேதா (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.
பாண்டியனை ஒரு வழக்கில் போலீசார் தேடுவதால் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். கருணாமூர்த்தி சென்னையில் தங்கியிருந்து பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சுவேதாவும், ராணியும் மட்டும் என்.ஆர்.பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்து வந்தனர்.
கடந்த 30-ந்தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணி உடலில் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதில் மருமகள் சுவேதா அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சதீஷ்குமாருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம்.
இது எனது மாமியார் ராணிக்கு தெரிந்து என்னை கண்டித்தார். எனது கணவரிடம் கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்துபோன நான் கள்ளக்காதலன் சதீஷ்குமாரிடம் தெரிவித்தேன். அவர், எனது மாமியாரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விடலாம் என்று கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன். இதற்காக அவர் என்னிடம் ரூ.500 கொடுத்து பெட்ரோல் வாங்கி வைக்குமாறு தெரிவித்தார். அதன்படி 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருந்தேன்.
கடந்த 30-ந்தேதி மாமியார் ஹாலில் தூங்கினார். அன்று இரவு 10 மணிக்கு பிறகு வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரிடம் பெட்ரோலை எடுத்துக் கொடுத்தேன். அவர் எனது மாமியார் மீது பெட்ரோலை ஊற்றினார். நான் அவர் மீது தீக்குச்சியை கொளுத்திப்போட்டேன். இதனால் உடலில் தீப்பற்றி அவர் அலறி துடித்தார். ஆனால் நான் எனது அறைக்கு சென்று தாழ்ப்பாள் போட்டு தூங்குவது போல் நடித்தேன். சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதைடுத்து கள்ளக்காதலன் சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.
- சேரன்மகாதேவியில் பெண் கொலை தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
- கொலை தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை.
இவரது மனைவி மாரியம்மாள் (வயது56). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் மாரியம்மாளை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய சேரன்மகாதேவியை சேர்ந்த நடராஜன் மகன்கள் கணேசன் (38), ஆறுமுகம் (40), சுரேஷ் (36), கணபதி மகன் குட்டிபாண்டியன் (50), பண்டாரம் மகன் நெல்லையப்பன் (36) உள்பட 6 பேரை கைது செய்தனர்.
அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
சேரன்மகாதேவி ரெயில்வேகேட் பகுதியில் சம்பவத்தன்று நாங்கள் நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தோம். அவ்வழியாக ராசுக்குட்டி (28) தனது நண்பர்களுடன் சென்று கொண்டிந்தார்.
அப்போது எங்களுக்கும், ராசுகுட்டி தரப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றோம்.
அதன்பின்னர் நாங்கள் ராசுக்குட்டி வீட்டுக்கு சென்றோம். அங்கு ராசுக்குட்டியின் தாய் மற்றும் பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம் ராசுக்குட்டி எங்கே என கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் ராசுக்குட்டியின் தாயை வெட்ட முயன்றோம். அதனை அவரது சகோதரி மாரியம்மாள் தடுத்தார்.
இதனால் அவரை சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.
- மல்லிகா, என்னிடம் பணத்தை கேட்காதே, இனிமேல் வீட்டு பக்கம் வராதே என சத்தம் போட்டார்.
- பணம் தராமல் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த என்னிடம் மல்லிகா தரக்குறைவாக திட்டியது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களுக்கு சண்முகம் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் கோவையில் கிரீல் கேட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது வீட்டின் எதிர்வீட்டை சேர்ந்தவர் சின்ராசு (28). கூலி தொழிலாளி. இவரை, சண்முகம் கோவையில் உள்ள தனது கிரீல் கேட் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில் அங்கு சின்ராசு, ஒரு மாதமே வேலை பார்த்த நிலையில் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டார். அப்போது அவருக்கு வழங்க வேண்டிய சம்பளம் பணம் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை தருமாறு சண்முகத்திடம் சின்ராசு கேட்டு வந்தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை கேட்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த அவரது தாயார் மல்லிகாவுக்கும், சின்ராசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த சின்ராசு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து மல்லிகாவை அடித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மல்லிகா மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மல்லிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சின்ராசை கைது செய்தனர். கைதான அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான், மல்லிகாவின் மகன் சண்முகம் என்பவர் கோவையில் நடத்தி வரும் கிரீல் கேட் தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலை செய்தேன். பின்னர் சம்பளம் குறைவாக இருந்ததால் நான் வேலையில் இருந்து நின்று விட்டேன். அப்போது எனக்கு வழங்க வேண்டிய சம்பள பணம் ரூ. 10 ஆயிரம் பாக்கி இருந்தது. இந்த பணத்தை சண்முகத்திடம் கேட்டேன். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.
இது தொடர்பாக எனக்கும், சண்முகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சண்முகத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு பாக்கி பணத்தை கொடுங்கள் என கேட்டபோது, அதற்கு அவர் நான் வெளியூரில் இருக்கிறேன். திரும்பி வந்தபிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்.
இதனால் அவரது வீட்டிற்கு சென்று அவரது தாய் மல்லிகாவிடம் உங்களது மகன் சம்பள பணத்தை தரவில்லை, நீங்களாவது பணத்தை தாருங்கள். இல்லையென்றால் உங்களது மகனிடம் பணத்தை தர சொல்லுங்கள் என்றேன்.
அப்போது மல்லிகா, என்னிடம் பணத்தை கேட்காதே, இனிமேல் வீட்டு பக்கம் வராதே என சத்தம் போட்டார். இதனால் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது எனக்கு அவமானமாக இருந்தது.
ஏற்கனவே பணம் தராமல் ஏமாற்றப்பட்ட விரக்தியில் இருந்த என்னிடம் மல்லிகா தரக்குறைவாக திட்டியது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நான், அவரை கட்டையால் அடித்துக் கொன்றேன். இவ்வாறு சின்ராசு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கைதான சின்ராசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ெஜயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (வயது 54). இவர் குப்பம்பட்டியில் உள்ள சத்துணவு மையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் மல்லிகா (31) என்பவருக்கும் சரவணக்குமாருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரவணக்குமார் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி செலவு செய்து வந்தார். மேலும் அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மல்லிகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களாகவே சரவணக்குமார் தனது மாமியாரிடம் சென்று எனது மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை என தகராறு செய்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
மேலும் பத்மாவதியையும் சரவணக்குமார் தாக்கி மிரட்டி வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருந்த பத்மாவதியை சரவணக்குமார் நேற்று கடுமையாக தாக்கி கீழே தள்ளினார்.
இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மல்லிகா தனது தாயாரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மல்லிகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாக்கியதால்தான் தாய் இறந்து விட்டார் என கூறினார். அதன் பேரில் போலீசார் சரவணக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் கனிமொழி (வயது25). ‘பி.இ.’ பட்டதாரி. இவரது மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் பாளை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
கனிமொழிக்கு கடந்த 6.2.19 அன்று ஏர்வாடியை சேர்ந்த லெனின் என்ற வாலிபருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கனிமொழி மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த கனிமொழியை அவரது தம்பி சுந்தரபாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். ரத்தம் கொட்டிய அரிவாளுடன் அவர் பாளை போலீசில் சரண் அடைந்தார்.
பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் சுந்தரபாண்டியனை கைது செய்தனர். கைதான சுந்தர பாண்டியன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது அக்காள் கனிமொழியின் திருமணம், கடந்த மாதம் மிகவும் சிறப்பாக நடந்தது. மாப்பிள்ளை லெனின் லாரி டிரைவராக இருப்பது என் அக்காவுக்கு தெரிந்து, சம்மதித்து தான் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார்.
பின்னர் சமரசம் செய்து கனிமொழியை மீண்டும் மாப்பிள்ளையுடன் சேர்த்து வைத்தோம். 10 நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, நான் அவருடன் வாழ மாட்டேன் என்று மீண்டும் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். இது எங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரத்தில் அவளை வெட்டிக் கொலை செய்தேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாளை போலீசார் சுந்தர பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நடுவூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புஷ்பம் (வயது 70). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புண்ணிய மார்த்தாண்டம் (60). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை புண்ணிய மார்த்தாண்டம் வீட்டு கழிவுநீர், புஷ்பம் வீட்டு முன்பு சென்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பம் இதுகுறித்து புண்ணிய மார்த்தாண்டத்திடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன் (40), ரமேஷ் ஆகியோர் புஷ்பத்தை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் புஷ்பம் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை 2 பேரும் சேர்ந்து காலால் மிதித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேவி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், புஷ்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ‘‘கழிவுநீர் பிரச்சனையில் தொடர்ந்து எங்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசியதால் கொன்றோம்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
பின்பு கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புண்ணியமார்த்தாண்டம் மனைவி ரத்னபாய் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் வேலை செய்து வந்தார்.
அப்போது அதே மில்லில் பிட்டராக வேலை பார்த்த சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து இருவரும் கணவன்- மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 3½ வயதில் நித்திகாஸ்ரீ என்ற குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1 வருடமாகபல்லடம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையத்தில் ராமசாமி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.
இதற்கிடையில் இவர்கள் குடியிருந்த வீடு சில வாரங்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் அவர்கள் வாடகையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீட்டில் பிரகாஷ் என்பவர் வாடகைக்கு குடியேற முயன்றபோது லதா கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணித்து மண் போட்டு மூடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து காமநாயகன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் கள்ளக்காதலன் செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே பூசாரிபாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற செந்திலை போலீசார் கைது செய்தனர். கைதான செந்தில் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நானும், லதாவும் கணவன் மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் எங்களுக்கு நித்திகா ஸ்ரீ என்ற குழந்தை பிறந்தது. எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவளுக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு என்னை விட்டு பிரிந்து கணவருடன் சென்று விடுவேன் என்று மிரட்டினார். இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கட்டையை எடுத்து லதாவின் தலையில் அடித்துக் கொன்றேன். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவளுடைய உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து, அதன் மேல் பகுதியில் மண்ணை போட்டேன்.
பின்னர் குழந்தையை கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாவக்காட்டுபாளையத்தில் உள்ள லதாவின் தாயாரிடம் விட்டேன். அவர் கேட்டபோது லதா கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாவும், அவளை சமாதானம் செய்து அழைத்து வந்து குழந்தையை அழைத்துச்செல்கிறேன். அதுவரை இருக்கட்டும் என்றேன். அவரும் அதனை நம்பி விட்டார்.
பிணத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியவில்லை. 9 மாதங்கள் பிணத்துடன் வசித்தேன். பின்னர் வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 3 மாதங்களாக வேலைக்கு சென்றேன். கொலை குறித்து போலீசாருக்கு தெரிந்ததும் தலைமறைவானேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்தார். கைதான செந்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
போடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் இன்று காலை ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கூடலூரைச் சேர்ந்த கண்ணன் மனைவி முருகேஸ்வரி (30) என தெரிய வந்தது.
கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். முருகேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வந்தார். மேலும் போடி மற்றும் சில்லமரத்துப்பட்டியில் தங்கி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் மீது போலீசில் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் முருகேஸ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
முருகேஸ்வரியை சிலர் நேற்று இரவு உல்லாசத்துக்காக இங்கு அழைத்து வந்துள்ளனர். அவர் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் உல்லாசத்துக்கு மறுத்துள்ளார். இதனால் போதையில் இருந்த அந்த கும்பல் முருகேஸ்வரியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மோப்பநாய் அவரது உடலை முகர்ந்து பார்த்து விட்டு 2 கி.மீ தூரம் ஓடி நின்றது.
இதனையடுத்து அவரது உடலை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). கணவரை பிரிந்து சிறுவயது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பேராசிரியர்கள் மீது மாணவி பாலியல் புகார் அளித்த அரசு வேளாண்மை கல்லூரியின் பின்புறமுள்ள வனப்பகுதியில் இன்று காலை மரத்தில் ராணியின் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணியின் பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி பார்வையிட்டனர்.
அப்போது, அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. மேலும் மரம் செங்குத்தாக இருப்பதால், ராணி அதில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.

ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிந்த போலீசார், ராணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ராணியின் உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






