உவரி அருகே இளம்பெண்ணை கொலை செய்த கணவரை பிடிக்க போலீஸ் தீவிரம்

தனது மனைவியின் நடத்தையில் அகிலன் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.
கொலை செய்யப்பட்ட ரேஷ்மி, தப்பி ஓடிய அகிலன்.
கொலை செய்யப்பட்ட ரேஷ்மி, தப்பி ஓடிய அகிலன்.
Published on

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்(வயது 38). மீனவர். இவரது மனைவி ரேஷ்மி(31). தையல் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கொலை

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அகிலன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் ரேஷ்மி தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று மதியம் சமாதானப்படுத்தி மீண்டும் ரேஷ்மியை கணவர் வீட்டில் அவரது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர். மாலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த அகிலன் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தால் ரேஷ்மியை தலையில் அடித்துக்கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக உவரி போலீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தர வின்பேரில் தலைமறைவான அகிலனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com