சேரன்மகாதேவியில் பெண் கொலையில் கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சேரன்மகாதேவியில் பெண் கொலை தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். கொலை தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேரன்மகாதேவியில் பெண் கொலையில் கைதான 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலை.

இவரது மனைவி மாரியம்மாள் (வயது56). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில் மாரியம்மாளை 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய சேரன்மகாதேவியை சேர்ந்த நடராஜன் மகன்கள் கணேசன் (38), ஆறுமுகம் (40), சுரேஷ் (36), கணபதி மகன் குட்டிபாண்டியன் (50), பண்டாரம் மகன் நெல்லையப்பன் (36) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

சேரன்மகாதேவி ரெயில்வேகேட் பகுதியில் சம்பவத்தன்று நாங்கள் நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்தோம். அவ்வழியாக ராசுக்குட்டி (28) தனது நண்பர்களுடன் சென்று கொண்டிந்தார்.

அப்போது எங்களுக்கும், ராசுகுட்டி தரப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றோம்.

அதன்பின்னர் நாங்கள் ராசுக்குட்டி வீட்டுக்கு சென்றோம். அங்கு ராசுக்குட்டியின் தாய் மற்றும் பெரியம்மா மாரியம்மாள் ஆகியோர் இருந்தனர்.

அவர்களிடம் ராசுக்குட்டி எங்கே என கேட்டோம். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாங்கள் ராசுக்குட்டியின் தாயை வெட்ட முயன்றோம். அதனை அவரது சகோதரி மாரியம்மாள் தடுத்தார்.

இதனால் அவரை சரமாரியாக வெட்டினோம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com