குடும்ப தகராறில் விபரீதம்: தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன் கைது

கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் விபரீதம்: தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன் கைது
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் சக்திவேல் (வயது 35). கார்த்திக் (வயது 28).

கார்த்திக் மனைவி புனிதா (வயது 24). இவர்களுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது தாயாரிடம் தகராறில் ஈடுப்பட்ட புனிதாவை கார்த்திக்கின் அண்ணன் சக்திவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இந்த தகராறு சகோதர்களான சக்திவேல், கார்த்திக் இடையே சண்டையாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கையில் வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை உறவினர்கள் அத்திக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் உடல் திருவாரூரில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கார்த்திக்கின் மனைவி புனிதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com