சின்னசேலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார்,இவர் வீட்டுக்கு திரும்பும்போது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்..3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்..
வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள்.
வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள்.
Published on

கள்ளக்குறிச்சி:

நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (வயது 44). இவர் தியாகதுருகத்தில் பட்டறை நடத்தி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் தோட்டபாடி வனகாப்பு சாலையில் செல்லும் பொழுது 4 இளைஞர்கள் வழி மறைத்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் 4 இளைஞர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்

. அப்பொது நயினார்பாளையம் செல்லும் வனப்பகுதியில் பதுங்கி இருந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர் ,பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கடலூர் மாவட்டம், அடரி, வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார் (வயது 21), சின்னசேலம், சிவன் கோயில் தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் சூர்யா (வயது 20), சூளாங்குறிச்சி காந்திநகர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராக்பெல்லா (வயது 19) என்பதும் தெரியவந்தது. பின்னர் 3 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற மற்றொரு இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது போன்ற வழிப்பறியில் ஈடுபடு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com