பொள்ளாச்சி அருகே ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது

ஆறுமுகம் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஒரு ஆடு ேதாட்டத்தை விட்டு வழி தவறி வெளியே சென்றது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற 3 வாலிபர்கள் ஆட்டை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து ஆறுமுகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆட்டை திருடிய ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த மதன் பிரகாஷ் (19), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அஜய்குமார் (19), காளிங்கராயர் நகரை சேர்ந்த ரமணி (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ஆட்டை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com