என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் தாக்குதல்"

    • தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான்.
    • சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த இளம்பெண், தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவரை பிரிந்த அவர், 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் கலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த வீட்டுக்கு சிறுவனின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர் அடிக்கடி வந்து சென்றபடி இருந்துள்ளார்.

    இது அந்த சிறுவனுக்கு பிடிக்கவில்லை. தாய் தனது கள்ளக்காதலனுடன் இருப்பதற்கு சிறுவன் தடையாக இருந்துள்ளான். அவன் இரவு நேரத்தில் தனது தாயுடன் படுத்து தூங்கியிருக்கிறான். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக இருந்திருக்கிறது.

    சிறுவனின் செயல்பாடுகள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அவர் தாயுடன் இருந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளான். சிறுவனின் கையை பிடித்துக்கொண்டு, அவனது தலையை சுவர் மற்றும் குளியலறை கதவில் மோதச் செய்துள்ளார்.

    மேலும் சிறுவனின் மார்பு பகுதியில் அவனது தாய் கைவிரல் நகங்களால் பிரண்டி காயப்படுத்தி உள்ளார். சிறுவனில் நிலை குறித்து அறிந்த அவனது தந்தை, சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேலும் அவர் தனது மகன் கொடூரமாக தாக்கப்பட்டது குறித்து போலீசிலும் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிறுவனின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.

    வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.

    வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் 'பீகாரின் லெனின்கிராட்' என்று அழைக்கப்படும் பெகுசராய் பகுதி உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை சிலர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    அங்குள்ள லக்மினியா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரோஷன் குமார், ஜெய்ராம் சவுத்ரி, ககுல் குமார் என்ற 3 பேர் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சில பொருட்களை அந்த சிறுவன் திருடியதாக சந்தேகம் அடைந்து அந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புகாரை சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டில் தனது மகனை ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து தாக்கியதாக அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவனை கதவை பூட்டி பலமாக தாக்கி உள்ளார்.
    • காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவர்ஷன் (வயது 9). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவன் சத்தியவர்ஷனை அழைத்து, காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது. அப்போது சத்தியவர்ஷன் நான் எழுதவில்லை எனக் கூறிய நிலையில், அதைக்கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி சத்தியவர்ஷனை பலமாக தாக்கி உள்ளார்.

    இதற்கிடையே சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது மோகன் வீட்டில் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே, உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 2 பேர் மோகன் வீட்டிற்குள் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வராஜ், கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×