search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train track"

    • மதுபோதையில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
    • மக்கள் கொடுத்த சிக்னலால் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார். தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் டிரைவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய டிரைவரால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
    • உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.

    இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    தண்டாவளத்தில் தலைவைத்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ரெயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார். முதலாவது பிளாட்பாரத்துக்கு வந்த அவர், நடைமேடை முடியும். இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை சென்றார். அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

    உடனே அந்த வாலிபர் தீடீரென்று தண்டா வளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் அவர் தலை மீது எறிச்சென்றது. இதில் தலை துண்டான நிலையில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து சக்கரக் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி பிரபாகின் ராமேசுவரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ் கோடி, தனிப்பிரிவு தலைமை காவலர் மல்கோத்ரா பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(29) என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, கோவை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் யார்டு அருகே உள்ள தண்டவாளத்தை இரவு 10.15 மணிக்கு ரெயில்வே ஊழியர்கள் சோதனை செய்தபடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஊழியர்கள் தண்டவாள விரிசல் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் அவ்வழியாக வந்த கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூரு மெயில், எர்ணாகுளம் வராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12.45 மணியளவில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரெயில்கள் அந்த பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது.

    ரெயில்கள் 2 மணி நேரம் நிறுத்தபட்டதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது ரெயில் மோதியது. இதில் அடிபட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 3 மகள் 1 மகன் உள்ளனர்.

    சுந்தரேசன் நேற்றிரவு கோதண்டபட்டி ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
    தருமபுரி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை கட்டு செக்காரப்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். அவரது உடல் சிதைந்து கிடந்தது. இன்று காலை அந்த வழியாக  சென்ற பொதுமக்கள் பெண்ணின் உடல்கள் சிதைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தருமபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் பச்சை கலரில் புடவையும், ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். 

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்காக ரெயில் முன் பாய்ந்து இறந்தாரா? அல்லது யாராவது கற்பழித்து தண்டவாளத்தில் வீசி சென்றதால் ரெயிலில் அடிப்பட்டு  உடல் சிதைந்து கிடக்கின்றனவா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாச்சலம் பயணிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்துள்ளதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் ரெயில் இன்று காலை 9 மணிக்கு ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது கூத்தக்குடி முகாச பாரூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இந்த சிலாப்பின் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதனால் சிலாப் தூள், தூளாக உடைந்து சிதறியது. இதை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை அங்கு நிறுத்தி, விட்டு, உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உயர் அதிகாரிகள், ஆர்.பி.எப். போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும் தண்டவாளம் சேதமாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த உடைந்த சிலாப் துண்டுகளை அகற்றி, தண்டவாளத்தை சரி செய்தனர். அதன் பிறகு ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்றது.

    ரெயிலை கவிழ்க முயன்ற நாசகார கும்பல் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க கூத்துக்குடி மற்றும் முகாச பாரூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வையம்பட்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மணப்பாறை:

    மணப்பாறை அடுத்த வையம்பட்டி ரெயில் நிலையத்தின் அருகே உள்ள தண்டவாளத்தில் இன்று காலை பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக  கிடந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். மஞ்சள் கலர் சட்டையும், கைலியும் அணிந்து உள்ளார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    புதுவையில் தண்டவாளத்தில் தலையை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டது. இந்த ரெயில் ரெட்டியார் பாளையத்தை அடுத்த மரியாள் நகர் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வாலிபர் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். ரெயில் வேகமாக சென்றதால் அந்த வாலிபரின் மீது ரெயில் ஏறி சென்றது. இதில் அவரது தலை துண்டானது.

    இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் உழவர்கரை வின்சென்ட் வீதியை சேர்ந்த அந்துவான் மகன் வனத்துராஜ் (28) என்பது தெரியவந்தது.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில்வே தண்டவாளத்தில் காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரி அருகே ஒளிமதி என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகில் சம்பவத்தன்று தலையில் காயத்துடன் ஆண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து கொரடாச்சேரி ரெயில் நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சாவூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் காந்தி சடலத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    இறந்து கிடந்தவர் கருப்பு நிற வேட்டி, ஊதா நிற பனியனும் அணிந்துள்ளார். இறந்தவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இறந்தவர் யார்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆத்தூர் அருகே இன்று காலை பலத்த மழை பெய்ததில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சேலம் ரெயில் வந்ததால் பொதுமக்கள் துணியை காட்டி நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள அம்மம் பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தண்டவாளத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மண் அரிப்பு காரணமாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சமயம் விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி, பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரெயில் என்ஜீன் டிரைவரை பார்த்து சிகப்பு துணியை காட்டி ரெயிலை நிறுத்துமாறு கூறினார்கள். உடனே டிரைவரும் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    இதையடுத்து, தண்டவாளத்தில் மண் அரிப்பு குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்தி ரம் மூலம் சீரமைப்பு பணி நடந்தது.

    பின்னர், சேலம்- விருத் தாச்சலம் ரெயில் அங்கிருந்து 8.05 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக இந்த ரெயில் தினமும் காலை 9 மணிக்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும். ஆனால், இன்று ½ மணி நேரம் தாமதமாக ரெயில் சேலம் வந்து சேர்ந்தது.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் ஊழியர்கள், பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    தக்க சமயத்தில் பொதுமக்கள் சிகப்பு துணியை காட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    கோவை சிங்காநல்லூரில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சிங்கா நல்லூர்-இருகூர் இடையே உள்ள இந்திரா நகர் என்ற பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிங்காநல்லூர் மற்றும் கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவருக்கு 45 வயது இருக்கும் என தெரிந்தது. மேலும் அவர் லுங்கி, சர்ட்டுஅணிந்து காணப்பட்டார். தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததால் அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் இறந்தாரா? என்று விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால் வயிற்றில் மட்டும் ஒரு கத்திக்குத்து இருந்தது. எனவே அவரை யாரோ சிலர் கொலை செய்து, ரெயில் மோதி இறந்து விட்டது போல் நாடக மாட உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அய்யப்பன் (45) என்பதும், இவர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகரில் அறை எடுத்து தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

    எனவே வேலை முடிந்து இவர் தனது நண்பர்களுடன் மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட் டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட அய்யப்பனுடன் வேலை பார்த்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பேர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. அய்யப்பன் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கோவைக்கு வந்ததும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ×