என் மலர்

  நீங்கள் தேடியது "train hit"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாளத்தை கடந்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  வாணியம்பாடி- கேத்தாண்டப் பட்டி ரெயில் நிலையங்களுக்கிடையே கொடையாஞ்சி பகு தியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த வர் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த எட்வின் தாமஸ் (வயது 40) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி பலியானதும் தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாளத்தின் நடுவில் தந்தை நிற்பதைக் கண்ட மகன் காப்பாற்ற ஓடியுள்ளார்.
  • வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை.

  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹரி சிங் நர்வாரியா(55). நேற்று தனது குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக ரயில் பாதையில் நின்றுள்ளார்.

  அப்போது அங்கு வந்த அவரது மகன் முன்னேஷ் (19), தண்டவாளத்தின் நடுவில் தனது தந்தை நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரைக் காப்பாற்ற டிராக்கில் அவர் ஓடியுள்ளார். ஆனால் விரைவாக வந்த ரயில் இருவரும் மீது மோதியது.

  இதில் உடல் துண்டான நிலையில் தந்தையும் மகனும் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மீனா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.
  • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் மோதி பெண் இறந்துள்ளார்.

  நெல்லை:

  நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

  இந்த பாதையில் இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் அந்த மூதாட்டி ஆலடிப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி எமிலி ரத்தினபாய்(வயது 52) என்பது தெரியவந்தது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு குழந்தை கிடையாது என்பதால், எமிலி ரத்தினபாய் அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வயது முதிர்வின் காரணமாக தடுமாறி நடந்துள்ளார்.

  இந்தநிலையில் அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

  ஜோலார்பேட்டை:

  வாணியம்பாடி அருகே காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் குமார் (வயது 62) இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்

  இந்நிலையில் நேற்று விண்ணமங்கலம் வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வளையாம்பட்டு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு சம்பவம்

  இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவருக்கு அமுதா என்கிற மனைவியும் 2 மகளும் உள்ளனர்.

  இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாயுடன் கருத்து வேறுபாடு காரணமாக வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை:

  மதுரை வாடிப்பட்டி அருகேயுள்ள இடையப்பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 22). பூ கட்டும் வேலை பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் சரவணனுக்கும், அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சரவணன் கோபித்துக் கொண்டு மதுரைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் செந்தில் குமார் சம்பவத்தன்று இரவு செல்லூர் ரெயில்வே பாலம் வந்தார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

  இது தொடர்பாக செந்தில் குமாரின் சகோதரர் பாண்டி, ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  கடத்தூர்:

  தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள புட்டி ரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

  இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆறுமுகத்திற்கு ரேவதி (40) என்ற மனைவியும், மாதேஷ் (21), பாலசுப்பிரமணியன் (19) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணப்பாறையில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  மணப்பாறை:

  திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் தண்டவாளத்தில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.  

  பின்னர் அரை கி.மீ. தூரத்திற்கு சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது ரெயில் மோதியது. இதில் அடிபட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  ஜோலார்பேட்டை:

  வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 3 மகள் 1 மகன் உள்ளனர்.

  சுந்தரேசன் நேற்றிரவு கோதண்டபட்டி ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

  ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எலக்ட்ரீசியன் மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  சேலம்:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 49). எலக்ட்ரீசியனான இவர் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தார்.

  இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து பணிக்கு சென்ற அவர் அயோத்தியப்பட்டணம் பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற சேலம்-விருத்தாச்சலம் ரெயில் அவர் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மணிமாறனுக்கு வளர்மதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லியனூரில் ரெயில் மோதி கறிவேப்பிலை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

  புதுச்சேரி:

  வில்லியனூர் ரெயில்வே கேட் அருகே நேற்று அதிகாலை ஒரு வாலிபர் ரெயில் மோதி பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் விநாயகம் ஆகி யோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயில் மோதி பிணமாக கிடந்த வாலிபர் வில்லியனூர் பெருமாள் புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்பதும், இவர் வில்லியனூர் மார்க்கெட்டில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

  அதிகாலை வேளையில் ரமேஷ் இயற்கை உபாதை கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பலியாகி இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயில் மோதி பலியான ரமேசுக்கு திருமணாகி அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பண்ருட்டியில் ரெயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பண்ருட்டி:

  பண்ருட்டி, கடலூர் ரோட்டில் திருவதிகை ஆயில் மில் பஸ் ஸ்டாப் அருகில் ரெயில்வே கேட் உள்ளது. இங்கு இன்று காலை இந்த வழியாக ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயில் மோதியதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை, கை, கால் துண்டிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

  இதுகுறித்து கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.