விருத்தாசலத்தில் ரயில் மோதி வாலிபர் பலி போலீசார் விசாரணை

ராயர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
விருத்தாசலத்தில்  ரயில் மோதி வாலிபர் பலி போலீசார் விசாரணை
Published on

கடலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நத்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராயர் (வயது 42). இவர் விருத்தாசலம் அருகே நாச்சியார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை 5:30 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே ராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com