என் மலர்

  நீங்கள் தேடியது "employee died"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
  காரிமங்கலம்:

  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி வேலை செய்து வந்தார்.

  இந்நிலையில் இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் செல்லும்போது, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து தகவல் அறிந்துவந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெருந்துறை அருகே இன்று மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  பெருந்துறை:

  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது33). தனசேகர் தற்போது வெள்ளோடு அருகே உள்ள குட்டபாளையத்தில் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

  தனசேகர் தினமும் குட்ட பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் கிளை அலுவலகம் செயல்படுகிறது. அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.

  அதே போன்று இன்றும் குட்ட பாளையத்திலிருந்து தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். குனம்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேனும், தனசேகர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  கடத்தூர்:

  தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள புட்டி ரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

  இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆறுமுகத்திற்கு ரேவதி (40) என்ற மனைவியும், மாதேஷ் (21), பாலசுப்பிரமணியன் (19) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

  புதுச்சேரி:

  வில்லியனூர் அருகே துத்திப்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் மணி (வயது 52). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் பிட்டர் வேலை செய்து வந்தார்.

  சம்பவத்தன்று இவர் தொண்டமாநத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மணி மீது மோதியது.

  இதில், தூக்கி வீசப்பட்ட மணி தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

  இதையடுத்து சிகிச்சைக்காக மணியை அவரது குடும்பத்தினர் மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே மணி பரிதாபமாக இறந்து போனார்.

  இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  விபத்தில் பலியான மணிக்கு ராந்துமரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  சுவாமிமலை:

  கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). பம்பு பிட்டர். இவர் இன்று காலை கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருப்புறம்பியம் கடைவீதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் துரைராஜ் மீது மோதியது. 

  இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான துரைராஜிக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

  டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடுமுடி டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  முத்தூர்:

  திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அடுத்த விளாம்பட்டியை சேர்ந்தவர் வீரகார்த்திக் (வயது31). இவரது மனைவி பெயர் கலா. வீரகார்த்திக் முத்தூர் அருகே உள்ள வீரசோழ புரத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

  சம்பவத்தன்று வீட்டில் வேலைக்கு போய் விட்டு வருவதாகவும் மறுநாள் காலை தாமதமாக வருவேன்..என்று மனைவியிடம் சொல்லி கொண்டு வீரகார்த்திக் வேலைக்கு சென்றார்.

  ஆனால் மறுநாள் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கொடுமுடி ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகே வீரகார்த்திக் மயங்கி கிடந்ததை அவருடன் வேலை பார்க்கும் மோகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் வீரகார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

  இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரகார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மற்றும் தென்காசியில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  நெல்லை:

  நெல்லை பேட்டையில் உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந் தவர் சண்முகவேல் (வயது60), தொழிலாளி. இவர் நேற்று சைக்கிளில் பழைய பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த மினி லாரி, சண்முகவேல் மீது மோதியது.

  இதில் பலத்த காயம் அடைந்த சண்முகவேலை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சண்முகவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சிவகிரி அருகே உள்ள ராயகிரியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சண்முகராஜா (28). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பாளை 4 வழிச் சாலை ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சறுக்கி கீழே விழுந்தார்.

  இதில் படுகாயம் அடைந்த சண்முகராஜாவை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சண்முகராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்தும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (42). இவர் தற்போது தென்காசி அருகே உள்ள மேலகரத்தில் வசித்து வந்தார். நேற்று இவர் மோட் டார் சைக்கிளில் தென்காசியில் உள்ள நெல்லை ரோட்டில் வேகமாக வந்தார். அப்போது எதிரே தென்காசியை சேர்ந்த முருகராஜ் (54) என்பவர் ஓட்டி வந்த லாரி, சண்முக சுந்தரம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அந்தியூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கூலி தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

  அந்தியூர்:

  பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

  கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

  அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்தகாரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.

  சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருவடிக்குப்பத்தில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

  புதுச்சேரி:

  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன், (வயது55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் புதுவையில் தங்கி சில நாட்கள் வேலைசெய்து விட்டு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு கொடுக்க ஊருக்கு செல்வது வழக்கம்.

  இந்த நிலையில் நேற்று காலை தனசேகரன் கருவடிக்குப்பத்தில் உள்ள குடோனில் லாரியில் வந்த டைல்ஸ் கற்களை இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் டிரைவர் பின்னோக்கி நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் தனசேகரன் தலை நசுங்கியது. உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் தனசேகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் பரிதாபமாக இறந்து போனார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர், தயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்து போன தனசேகரனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை வி‌ஷ வண்டுகள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது52). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள வன்னியராஜா கோவில் அருகே தனியார் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி இவர் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.

  இதில் அப்பகுதியில் நின்ற மரத்தில் இருந்து வி‌ஷ வண்டு கூடு கீழே விழுந்தது. கூட்டில் இருந்த வி‌ஷ வண்டுகள் முருகேசனை சரமாரியாக கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் முருகேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி திருச்செந்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான முருகேசனுக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாடிப்பட்டியில் இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

  வாடிப்பட்டி:

  மதுரை செல்லூர் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது 33). இவர் சிம்மக்கல்லில் உள்ள பழக்கமி‌ஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று விருமாண்டி செல்லூர் அகிம் சாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வத்துடன் ஆந்திர மாநிலத்திற்கு மாம்பழங்கள் வாங்கச் சென்றார். அங்கு மாம்பழங்கள் வாங்கி விட்டு அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

  இன்று காலை 6.30 மணி அளவில் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தில் வேன் வந்து கொண்டிருந்தது.

  அப்போது டிரைவர் செல்வம், முன்னால் சென்ற லாரியை சரியாக கவனிக்க வில்லை. இதனால் வேக மாகச் சென்ற வேன் எதிர் பாராத விதமாக லாரியின் மீது மோதியது.

  இதில் வேனின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. விருமாண்டி இருக்கையிலேயே பிணமானார்.

  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீசார் விரைந்துச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print