என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி சாவு"

    • மனைவிக்கு வளைகாப்பு நடந்த நிைலயில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் முருகன் என்கிற முருகேசன் (வயது 32). இவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2 வருடமாக ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நந்தினி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்ேபாது நந்தினி 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். நந்தினிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிலையில் தமிழக முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே அகர்பத்தி நிறுவனத்தில் திடீரென மின்சாரம் பழுது ஏற்பட்டது.

    இதனால் பழுதை சரி செய்ய அப்பகுதியில் பணிபுரியும் லைன் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மின் பழுது சரி செய்ய என்கிற முருகேசன் அகர்பத்தி நிறுவனம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    உடல் கருகி டிரான்ஸ்பார்மர் மீது பரிதாபமாக உயிரிழந்தார்

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி 5 மாத கர்ப்பிணி சாவு
    • சப்-கலெக்டர் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சின்ன பசலிகுட்டையைச் சேர்ந்தவர் ராஜாதேசிங்கு. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பூர்ணிமா (25) என் பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது 5 மாத கர்ப்பிணியாக பூர்ணிமா இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்ட கையை வாட்டர் சர்வீஸ் செய்யும் போது

    கொட்ட கையின் மேற்கூரையில் இருந்து எதிர்பாராத வித மாக கருவியில் இருந்து மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து பூர்ணிமாவின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது. பின்னர், உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டனர்.

    அப்போது சவக்குழியில் அவருடைய கணவர் ராஜ தேசிங்க குழி முழுவதும் உப்பை கொட்டி விட்டு அதில் திடீரென நிர்வாணமாக பூஜை செய்யத் தொடங்கினார்.பூர்ணிமாவின் சடலத்தின் மீதும் தன் மீதும் உப்பை கொட்டிக் கொண்டு அகோரி போல பூஜை செய்தார், பின்பு பிணத்தின் மீது படுத்த நிலையிலும், அமர்ந்த நிலையிலும் பூஜை செய்தார். இறுதி சடங்கில் பங்கேற்க வந்த உறவினர்கள் யாரையும் இறுதி சடங்கு செய்ய கூட அனுமதிக்காமல் நிர்வாணமாக சடலத்தின் மீது படுத்து கொண்டு அகோரிபோல கர்ஜித குரலில் தியானங்களை மேற்கொண்டார்.

    தொடர்ந்து 3 மணி நேரம்சடலத்தின் மீது தியானம் செய்தார்

    பின்னர் தன் மனைவி சடலத்தின் முகத்தை யாரும் பார்க்க கூடாது என்று கூறியபடி அனைவரையும் அங்கிருந்து வெளியே கலைந்து போக செய்தார். அதன் பின்னர் அவரே எழுந்து மண்வெட்டியால் மனைவியின் சடலத்தின் மீது மண்ணை போட்டு குழியை மூடினார்.

    இந்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே பரப் ரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாதேசிங்கு சாமியார் போல் மாறியதாகவும் அவர் சிவ பக்தர் எனவும் மனைவி யின் உடலை புதைக்கும் குழியில் இறங்கி அகோரி போல பூஜை செய்ததால் தாங்கள் பயந்து விட்ட தாகவும் தெரிவித்தனர்.

    ராஜா தேசிங்கு பூர்ணிமாவுடன் திருமணம் ஆகி 4 ஆண்டே ஆவதால் மின்சாரம் தாக்கி இறந்த வழக்கு சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    • ஹீட்டர் மூலம் தண்ணீரை சுடவைத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா கேத் தாண்டப் பட்டியை அடுத்த கூத்தாண் டகுப்பம் பகுதியை சேர்ந்தவர். ஆஞ்சிநேயன் (வயது 32). இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். தற்போது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படை போலீசாராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவியும், ரேணுகாந்தன், ரவிவர்மன், நித்திஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் குளிப்பதற்காக ஆஞ்சிநேயன் தனது வீட்டில் பிளாஸ்டிக் குடத்தில் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுடவைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தி னம் மற்றும் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இது குறித்து அவ ரது மனைவி சீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சரவணம்பட்டி,

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் யாதவ். இவரது சகோதரர் போலோகுமார் யாதவ்.

    இவர்கள் 2 பேரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றனர்.சம்பவத்தன்று சுபாஷ் யாதவ் (வயது27) கன்வேயர் பெல்ட்டிலிருந்து தண்ணீர் கேன் பாட்டில்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் யாதவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுபாஷ் யாதவ் சகோதரர் போலோ குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அரசு அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வரும் நிறுவனத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத ஊழியர் மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • திடீரனெ மின்சாரம் தாக்கி தூக்கிஎறியப்பட்ட ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (27). இவர் சேனண்கோட்டை மின்வாரிய சரகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூலாங்குளம் என்ற கிராம பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது.

    இதனை சரி செய்வதற்காக கருப்பசாமி மற்றும் அவருடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள் பூலாங்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

    அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் தனித்தனியாக பிரிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாததை அறியாத கருப்புசாமி மின் கம்பத்தின் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கருப்புசாமி தூக்கி வீசப்பட்டார். இதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மின்சாரம் தாக்கி கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே விழும் போது அருகில் மற்ற நபர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரமாக கருப்பசாமி மின் கம்பத்தின் கீழே கிடந்தார்.

    அதன் பின்னர் உடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர் ஒருவர் கருப்பசாமி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கருப்பசாமியை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹீட்டரில் குளிக்க வெந்நீர் வைத்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பெருமாள்சாமி கோவில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரத் தினவேல்.

    இவரது மகள் ரத் னாதேவி (வயது 17). தாமலேரி முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். இவரது பெற்றோர் புதுச்சேரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

    இதனால் ரத்னா தேவி பாட்டி பானுமதி பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமாலை ரத்னாதேவி குளிப்பதற்கு வெந்நீர் வைப்பதற்காக குடத்தில் தண்ணீர் பிடித்து அதில் ஹீட்டரை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குடத்தை தூக்கும் போது மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.

    கடைக்கு சென்று திரும்பிய அவரது சகோதரர் சக்திவேல் கைகளில் ஹீட்டருடன் ரத்னா தேவி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ரத்னாதேவி மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மின் இணைப்பை துண்டித்து, ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்ற உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×