வடலூரில் இன்று பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து சாவு

வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடலூரில் இன்று பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து சாவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com