search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies of electrocution"

    • சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சரவணம்பட்டி,

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் யாதவ். இவரது சகோதரர் போலோகுமார் யாதவ்.

    இவர்கள் 2 பேரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றனர்.சம்பவத்தன்று சுபாஷ் யாதவ் (வயது27) கன்வேயர் பெல்ட்டிலிருந்து தண்ணீர் கேன் பாட்டில்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் யாதவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுபாஷ் யாதவ் சகோதரர் போலோ குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அரசு அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வரும் நிறுவனத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடலூரில் இன்று மின்சாரம் தாக்கி பெயிண்டர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவரது மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் இன்று காலை வடலூர் கும்பகோணம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக உயர் அழுத்த மின்கம்பி சென்றது. இதை கவனிக்காமல் பிரான்சிஸ் குனிந்து நிமிர்ந்தபோது அவரது தலை மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×