search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "tasmac store"

  • எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.
  • எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

  ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள், கலெக்டரிடம் கொடுத்தி ருந்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:-

  நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக ஜெய கோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை தனியார் வசம் இருக்கும் போதில் இருந்து செயல்பட்டு வந்தது.

  இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறோம்.

  இந்த நிலையில் எங்கள் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இடை தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.

  இதனால் நாங்கள் மது வாங்குவதற்காக 5 கிலோ மீட்டர் வரை வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. அப்படி செல்லும்போது சில நேரங்களில் விபத்து க்கள் ஏற்படுகிறது.

  மேலும் போலீசார் வாகன பரிசோதனை செய்யும் போது பல வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்து பல ஆயிரம் ரூபாய்களை அபராதமாக விதிக்கின்றனர்.

  இதனால் அன்றாட கூலி வேலை செய்யும் நாங்கள் மிகவும் பாதிப்படை க்கிறோம். எனவே எங்கள் பகுதியில் இடைத்தேர்த லுக்காக மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

  • சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் சிதம்பரம்அருகே ெஜயம்கொண்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக கலைச்செல்வன், விற்பனையாளராக மூர்த்தி, தண்டபாணி ஆகியோர் உள்ளனர்.

  கடை உடைப்புநேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கடையை பூட்டை உடைத்தனர். பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்தனர்.அப்போது கடையில் கண்காணிப்பு காமிரா இருந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

  இன்று காலை டாஸ்மாக் கடை திறந்து கிடப்பது கண்டு அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து சூப்பர்வைசர் கலைச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்தார். அங்கு மதுப்பாட்டில்கள் அப்படியே இருந்தது. எதுவும் கொள்ளைபோகவில்லை.

  இதுகுறித்து மருதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

  • ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

  இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.

  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ாமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்துள்ளது.
  • ரூ.860, 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சூப்பர்வைசராக தனுஷ்கோடி (52) இருந்து வருகிறார்.

  கடந்த 5-ந் தேதி இரவு 10 மணிக்கு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு ரோந்து சென்ற போலீசார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.

  இதையடுத்து தனுஷ்கோடிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், ஷட்டரை உடைத்தும் உள்ளே இருந்த சில்லறை பணம் ரூ.860, கடையின் இருப்பை சரி பார்த்தபோது 650 மில்லி பிடிக்கக்கூடிய 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  தேவகோட்டை அருகே மதுபானக்கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
  தேவகோட்டை:

  தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியை சேர்ந்தவர் குருசாமி (வயது 42). இவருடன் வேலூர் மாவட்டம் துறைபாடியை சேர்ந்த ஜோசப் (36) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலை முடிந்ததும், குருசாமி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து தேவகோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுபானக்கடையில் மது வாங்கி வர கூறினாராம்.

  பணத்தை மதுபானக்கடையில் கொடுத்த போது, அங்கு விற்பனையாளரான கோட்டைச்சாமி என்பவர் பணத்தை வாங்கி பார்த்ததும், சந்தேகமடைந்து, மதுபானக்கடை ஊழியர்கள் உதவியுடன் ஜோசப்பை பிடித்து வைத்துக்கொண்டு போலீசுக்கு தகவல் கூறினார். 

  இதையடுத்து தேவகோட்டை நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு என்பதும், அதை மதுபானக்கடையில் மாற்ற முயன்றதும் தெரியவந்ததை தொடர்ந்து ஜோசப், குருசாமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
  டாஸ்மாக் கடைகளில் கூளிங் பீர் கிடைக்க டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்து அதை மதுக்கடைகளுக்கு வழங்கி வருகிறது. #TNTasmac
  சென்னை:

  தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூர், திருத்தணி, மதுரை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

  சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு சென்று ‘பீர்’ குடிப்பது அதிகமாகி உள்ளது.

  அப்போது ‘பீர்’ கூலிங்காக இல்லாவிட்டால் கடைக்காரர்களுடன் வாக்கு வாதம் செய்கின்றனர். பல கடைகளில் குளிர் சாதன பெட்டி பழுதாகி கிடப்பதால் ‘கூலிங் பீர்’ கொடுக்க முடிவதில்லை.

  இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் பீர் விற்பனை அதிகரிக்கும்.

  எனவே, பழைய குளிர் சாதன பெட்டிகளை மாற்றி விட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை தந்தால்தான் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

  இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத குளிர்சாதன பெட்டிகள் எத்தனை கடைகளில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

  இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்தது. அதை மதுக்கடைகளுக்கு இப்போது வழங்கி வருகின்றனர்.

  இதனால் சென்னையில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் ‘கூலிங் பீர்’ தட்டுப்பாடின்றி கிடைப்பதாக குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #TNTasmac
  இரணியல் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நாகர்கோவில்:

  இரணியலை அடுத்த கீழ மணியன்குழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று மதியம் மீண்டும் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையின் மேற்பார்வையாளர் மைக்கேல் ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த அவர் சம்பவம் குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடையினுள் சென்று பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பீர் பாட்டில்கள், 12 ரம் பாட்டில்கள் உள்பட 43 மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

  மேலும் அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமிரா, மாணிட்டர், சில்லறை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் மது பாட்டில்கள் இருந்த இடங்களில் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

  போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை கொள்ளையர்கள் திருடிச் சென்றதால் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் வேறு எங்கும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

  இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
  காஞ்சீபுரம்:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

  இதையொட்டி அவர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

  இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.
  விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  விருத்தாசலம்:

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவரும், மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

  நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

  நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களால் உடைக்க முடியவில்லை. உடனே கடையின் முன்பக்க இரும்பு ‌ஷட்டரில் மாட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

  பின்னர் அங்கு அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மொத்தம் ரூ.1½ லட் சம் மதிப்புள்ள மதுப்பாட்டிகளை எடுத்து சென்று விட்டனர்.

  இன்று மதியம் வழக்கம்போல் விற்பனையாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் கடைக்கு வந்தனர்.

  அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

  இது குறித்து அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மயிலாடுதுறையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை சினிமா செட் போடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  மயிலாடுதுறை:

  நடிகர் ஜீவா நடிக்கும் ‘சீர்’ சினிமா படத்தின் சூட்டிங் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கிழக்கு கோபுரவாசல் பகுதியில் நடந்தது. அப்போது கோவில் முன்பு மதுக்கடை இருப்பதை பெண்கள், பொதுமக்கள் அடித்து உடைத்து அகற்றுவதுபோன்ற திரைப்பட காட்சி எடுப்பதற்காக நேற்று மதியம் கீழவீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் எதிரே மதுக்கடை போன்ற அரங்கு போடப்பட்டது.

  இந்த நிலையில் கோவில் முன்பு புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதாக பொதுமக்கள் இடையே வதந்தி பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் கண்ணன் மற்றும் சிலர் அங்கு சென்று கோவில்கள் இருக்கின்ற இடத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அப்படி இருக்க திரைப்பட சூட்டிங் என்று கூறி பாருடன் மதுக்கடை இருப்பது போன்று எப்படி அரங்கு அமைத்தீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அதற்கு திரைப்பட குழுவினர் கோவில் முன்பு மதுக்கடை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தான் அதனை பெண்கள் அடித்து நொறுக்குவது போன்று காட்சி எடுக்கிறோம். சிறிது நேரத்தில் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம் என்று கூறினர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சினிமா காட்சி எடுக்கப்பட்டு, மதுக்கடை அரங்கு அகற்றப்பட்டது. அதன்பின்பு நடிகர் ஜீவா நடிக்கும் காட்சிகள் கோவில் முன்பு படமாக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.