search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "refrigerator"

  • காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது.
  • குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது.

  கள்ளக்குறிச்சி:

  திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி புதுநகரை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 59). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது. இது தொடர்பாக சீனுவாசனிடம் தகவல் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது. மின்அழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • திருச்சுழி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி வசதியில்லாததால் இறந்தவர்கள் உடல்கள் துர்நாற்றம் வீசுகிறது.
  • பிரீசர் வசதி செய்து தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருச்சுழி

  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு மருத்துவ–மனை செயல்பட்டு வருகி–றது. இங்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பல் வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக மருத்து–வமனை வந்து செல்கின் றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்கள் மற்றும் இயற்கை மரணங்களும் நிகழ்கிறது.

  இந்த நிலையில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் அசம்பாவிதங் கள் நிகழும் போது ஆங் காங்கே உள்ள பகுதிகளுக்கு உட்பட்ட அரசு சுகாதார நிலையங்களில் முதலுவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச் சைகளுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அப்போது விபத்து மற்றும் அநேக நபர்களுக்கு இதய அடைப்பு போன்ற பல்வேறு தவிர்க்க முடியாத காரணங் களால் பெரும்பாலான நேரங்களில் இறப்பு சம்ப வங்களும் நடக்கிறது.

  மேலும் திருச்சுழி அரசு மருத்துவமனையை தவிர வேறு எங்கும் பிரேத பரி–சோதனை செய்யும் வசதி இல்லை. எனவே விபத்துக–ளால் ஏற்படும் மரணம், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மரணம், தற் கொலை மரணங்கள் ஆகிய வற்றால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனை யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு அதன் பிறகு பிரேத பரிசோதனை செய் யப்பட்டு சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.

  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குடி பகுதிகளில் வாகன விபத்து மற்றும் நெஞ்சுவலி காரணமாக திடீரென இரண்டு பேரும் இறந்து–போன நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவர்க–ளின் உடல்களை அருகருகே ஒரே அறையில் ஒரே மேடையில் பாதுகாப்பின்றி கேட்பாரற்று போடப்பட்டி–ருந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பல மணி நேரங்களாக பிணவ–றையிலேயே கிடந்தது.

  அந்த உடல்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி பி–ணவறை பகுதிக்கே செல்ல முடியாத நிலையில் இறந்த–வர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களு–டன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் மாலையில் இறந்து மறுநாள் மதியம் வரை ஒருநாள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பிணவறையிலேயே கிடப் பில் போடப்பட்டதா–லும், பிரேதங்களை பாதுகாக்கும் பிரீசர் வசதி இல்லாத கார–ணத்தாலும் நேரம் செல்ல செல்ல இறந்தவர்களின் உடல்கள் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக் காக பல மணிநேரம் காத் துக்கிடக்கும் அவலநிலையும் தொடர் கதையாகி வருவதா–கவும் குற்றம் சாட்டி வரு–கின்றனர். ஒரு வேளை பிரேத பரிசோதனை செய் வ–தற்கு பல மணி நேரங்கள் தாமதமானால் உறவினர் களே தங்களது சொந்த செலவில் குளிர்சா–தனப் பெட்டியை ரூ.2000 முதல் வரை ரூ.4000 ரூபாய் வரை வாடகை செலுத்தி இறந்த–வர்களின் உடல்கள் பிண–வறையில் கெட்டுப்போ–காமல் இருக்க பொதுமக்கள் தங்களது சொந்த செலவி–லேயே பாதுகாக்கும் நிலை–யும் நடந்து வருகிறது.

  இறந்தவர்களின் உடல் களை கிடப்பில் போட்டு பல மணி நேரங்களுக்கு பிறகு தாமதமாக உடற்கூ–ராய்வு செய்யப்படும் போது கடும் துர்நாற்றத்துடன் கூடிய இறந்தவர்களின் உடல்களை வாங்கி சென்று உறவினர்கள் இறுதி சடங் குகள் செய்து அடக்கம் செய்வதிலும் சிக்கல்கள் நீடித்து வருகிறது.மேலும் இறந்தவர்களின் உடல்களை துர்நாற்றத்துடன் கொண்டு செல்வதால் நோய்த்தொற் றுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலநிலை தொடர்வதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பிரேதங்கள் மிகவும் தாமதமாக பரிசோதனை செய்வது குறித்து மருத்து–வர்களிடம் கேட்டாலும் சரிவர விபரங்களை தெரி விப்பதில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் பிரீசர் வசதியில்லாத கார–ணத்தால் இறந்தவர்களின் உடல்களை 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விருதுந–கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்ப–தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகி–றார்கள். ஆகவே திருச்சுழி, நரிக் குடி மற்றும் அதனை சுற்றி–யுள்ள பகுதிகளில் விபத்து மற்றும் தற்கொலை மரணங் கள் நிகழும் சமயங்களில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தாமத–மாகும் நேரங்களில் இறந்த–வர்களின் உடல்களை கெட் டுப்போகாமல் பாதுகாப் பாக வைக்க திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டி (பிரீசர்) வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கும், மாவட்ட கலெக் டருக்கும் பொதுமக்கள் கூட்டாக கோரிக்கை விடுத் துள்ளனர்.

  • குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது
  • இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது

  பல்லடம் : 

  பல்லடத்தில்கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ளது அரசு மருத்துவமனை. தினமும் சுமார் ஆயிரத்தி ற்கும் மேற்ப ட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், விபத்து, மற்றும் தற்கொலை போன்ற வற்றால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்வதற்காக இருப்பு வைக்க குளிர் சாதன பெட்டி வசதி உள்ளது. இதற்கிடையே சுமார் 18 வருடங்களுக்கு மேல் பழமையான அந்தக் குளிர்சாதன பெட்டி கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழுதடைந்து வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு குளிர்சாதனப் பெட்டியை பழுது பார்க்க வந்த பொறியாளர் குழு, இந்த குளிர்சாதன பெட்டி இனி பயன்படுத்த முடியாது புதிய குளிர்சாதன பெட்டி வாங்கி பயன்ப டுத்துங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி பழுதானதால், இறந்து போன வர்களின் உடல்க ளை பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்க முடியாத நிலை உருவானது.இதனால் அந்த உடல்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அந்த உட ல்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு பெரும் அலைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமன்றி சுல்தான்பேட்டை, பொங்கலூர், மங்கலம் போன்ற பகுதிகளில் இருந்தும் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக பல்லடம்அரசு மருத்துவ மனைக்குதான் கொண்டு வருகின்றனர். ஆனால் பல்லடம் அரசு மருத்துவ மனையில் ரத்த வங்கி, ஸ்கேன் போன்ற போதிய வசதிகள் இல்லை. இந்த வசதிகளை செய்து தர வேண்டிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தவும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது பிரேத பரிசோதனைக் கூட குளிர்சாதன பெட்டி பழுதடைந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை வைக்க முடியாமல்,திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இதனால் கிராமங்களில் இருந்து வரும் உறவினர்கள் உடலுடன் திருப்பூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் காலவிரயம் ,பணம், மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது. பிரேத பரிசோதனை செய்ய கால தாமதமும் ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் குளிர்சாதன பெட்டி புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர்.
  • பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  பல்லடம் :

  பல்லடம் சக்தி அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா நடராஜன் ஏற்பாட்டின் பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதியினர் பிரவீன் - ஐஸ்வர்யா ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்திற்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள குளிர் சாதன பெட்டியை இலவசமாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுபா,ஜமுனாராணி, தலைமை செவிலியர் கலைச்செல்வி, பல்லடம் பிரண்ட்ஸ் அரிமா சங்க தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது
  • கடந்த மாதம் சில்லறை மீன் வியாபாரம் செய்து வரும் மீனவர்களுக்கு மீன் விற்பனைக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டன.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீனவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

  கடந்த மாதம் சில்லறை மீன் வியாபாரம் செய்து வரும் மீனவர்களுக்கு மீன் விற்பனைக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மீனவர்களின் தேவைகளுக்கேற்ப உதவிகள் செய்யப்படும் என தெரிவித்த இந்நிறுவனம் தற்போது திரேஸ்புரம்,லூர்தம்மாள்புரம்,அண்ணா காலனி உள்ளிட்ட மீனவ பகுதிகளை சார்ந்தவர்களுக்கு நாட்டுப்படகில் சென்று மீன்பிடிக்கும் போது மீன்களை சேகரித்து வைக்க தேவையான குளிர் பதன பெட்டிகள் 27 மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.இறால் மீன்பிடி சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் யாசீர், ஸ்டெர்லைட் காப்பர் முதன்மை நிதி அலுவலர் ஆனந்த் சோனி ஆகியோர் மீனவர்களுக்கு இந்த குளிர் பதன பெட்டிகளை வழங்கினார்கள். குளிர் பதன பெட்டிகளை பெற்ற மீனவர்கள் மகிழ்ச்சியுடன் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

  • 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

  இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் திட்டப்பகுதியின் சார்பில், 6 பயனாளிகளுக்கு மனை ஒதுக்கீட்டு ஆணைகள், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில், 17 பயனாளிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் இடை நின்றவர்களுக்கு தொழில் பயிற்சிக்கான ஆணைகள், சிவகங்கை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.69 ஆயிரத்து 243 மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

  மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் உறுப்பினரின் வாரிசுதாரர்கள் 7 மாணவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோ்ச்சி பெற்றதை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.1,500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) சிவராமசந்திரன், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் புஷ்பராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் குடிசை மாற்று வாரிய சமுதாய அலுவலர் காளிதாஸ், மீன்வளத்துறை ஆய்வாளர் ஜோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் தரமற்ற அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • நீண்ட நாட்களான பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  நாகப்பட்டினம்:

  நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோ க்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்க ணக்கான மக்கள்வந்து செல்கின்றனர். வேளா ங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

  இங்கு தரமற்ற அழுகிய உபயோகத்திற்கு பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகி நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்து பார்வைக்கு மற்றும் குளிர்சாதன பெட்டியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு சீர் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரி த்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

  டாஸ்மாக் கடைகளில் கூளிங் பீர் கிடைக்க டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்து அதை மதுக்கடைகளுக்கு வழங்கி வருகிறது. #TNTasmac
  சென்னை:

  தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ வெயில் தொடங்குவதற்கு முன்பே வேலூர், திருத்தணி, மதுரை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.

  சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத குடிமகன்கள் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு சென்று ‘பீர்’ குடிப்பது அதிகமாகி உள்ளது.

  அப்போது ‘பீர்’ கூலிங்காக இல்லாவிட்டால் கடைக்காரர்களுடன் வாக்கு வாதம் செய்கின்றனர். பல கடைகளில் குளிர் சாதன பெட்டி பழுதாகி கிடப்பதால் ‘கூலிங் பீர்’ கொடுக்க முடிவதில்லை.

  இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மழை காலத்தை விட வெயில் காலத்தில் தான் பீர் விற்பனை அதிகரிக்கும்.

  எனவே, பழைய குளிர் சாதன பெட்டிகளை மாற்றி விட்டு புதிய குளிர்சாதன பெட்டிகளை தந்தால்தான் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

  இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகத்தின் தரப்பில் பழுதாகி செயல்படாத குளிர்சாதன பெட்டிகள் எத்தனை கடைகளில் உள்ளது என கணக்கெடுக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

  இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் 2 ஆயிரம் குளிர் சாதன பெட்டிகளை கொள்முதல் செய்தது. அதை மதுக்கடைகளுக்கு இப்போது வழங்கி வருகின்றனர்.

  இதனால் சென்னையில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் ‘கூலிங் பீர்’ தட்டுப்பாடின்றி கிடைப்பதாக குடிமகன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். #TNTasmac
  ×