திருக்கோவிலூர் அருகே பூட்டிய வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து சேதம்

காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது.குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது.
திருக்கோவிலூர் அருகே பூட்டிய வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து சேதம்
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி புதுநகரை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 59). வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோகராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு பணிக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பின்புறமிருந்து கரும்புகை வந்துள்ளது. இது தொடர்பாக சீனுவாசனிடம் தகவல் கொடுத்துவிட்டு, பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சமையலறையில் இருந்த குளிர்சாதனப்பெட்டி எரிந்து கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் குளிர்சாதனப்பெட்டி முற்றிலும் எரிந்து சேதமானது. மின்அழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com