டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு

ஈரோட்டில் டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் மயங்கி இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்த்தவர் மூர்த்தி (38). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூர்த்தியை விட்டு பிரிந்து அவரது மனைவி 2 குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்தார். சம்பவத்தன்று ஜெயகோபால் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அதிக மதுபோதையில் பேச்சு மூச்சு இல்லாமல் மூர்த்தி மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com