டாஸ்மாக் கடையில் திருட்டு

ாமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்துள்ளது. ரூ.860, 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
டாஸ்மாக் கடையில் திருட்டு.
டாஸ்மாக் கடையில் திருட்டு.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சூப்பர்வைசராக தனுஷ்கோடி (52) இருந்து வருகிறார்.

கடந்த 5-ந் தேதி இரவு 10 மணிக்கு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு ரோந்து சென்ற போலீசார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.

இதையடுத்து தனுஷ்கோடிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், ஷட்டரை உடைத்தும் உள்ளே இருந்த சில்லறை பணம் ரூ.860, கடையின் இருப்பை சரி பார்த்தபோது 650 மில்லி பிடிக்கக்கூடிய 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com