என் மலர்

  நீங்கள் தேடியது "public oppose"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மயிலாடுதுறையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை சினிமா செட் போடப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  மயிலாடுதுறை:

  நடிகர் ஜீவா நடிக்கும் ‘சீர்’ சினிமா படத்தின் சூட்டிங் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கிழக்கு கோபுரவாசல் பகுதியில் நடந்தது. அப்போது கோவில் முன்பு மதுக்கடை இருப்பதை பெண்கள், பொதுமக்கள் அடித்து உடைத்து அகற்றுவதுபோன்ற திரைப்பட காட்சி எடுப்பதற்காக நேற்று மதியம் கீழவீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் எதிரே மதுக்கடை போன்ற அரங்கு போடப்பட்டது.

  இந்த நிலையில் கோவில் முன்பு புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதாக பொதுமக்கள் இடையே வதந்தி பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சியின் நகர தலைவர் கண்ணன் மற்றும் சிலர் அங்கு சென்று கோவில்கள் இருக்கின்ற இடத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அப்படி இருக்க திரைப்பட சூட்டிங் என்று கூறி பாருடன் மதுக்கடை இருப்பது போன்று எப்படி அரங்கு அமைத்தீர்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

  அதற்கு திரைப்பட குழுவினர் கோவில் முன்பு மதுக்கடை இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தான் அதனை பெண்கள் அடித்து நொறுக்குவது போன்று காட்சி எடுக்கிறோம். சிறிது நேரத்தில் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவோம் என்று கூறினர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜா மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சினிமா காட்சி எடுக்கப்பட்டு, மதுக்கடை அரங்கு அகற்றப்பட்டது. அதன்பின்பு நடிகர் ஜீவா நடிக்கும் காட்சிகள் கோவில் முன்பு படமாக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  ×