search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol bottle"

    • சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 30). இவருக்கும் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீரக்குமார், ஜெகதீஸ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே இதனை எதிர்த்து கேட்ட ஜெகதீஸ்வரனை மதுபான பாட்டிலால் பின் மண்டையில் வீரக்குமார் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
    • காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் எல்லையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.55 ஆயிரம். தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாகை மாவட்டம் பனங்குடி சமத்துவ புரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 48) என்பதும், காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து மகாலிங்கத்தை போலீசார் கைது செய்து, மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைத்தை யும் காரைக்கால் மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம்பாதூர், திருநாவலூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமகலத்தில் ஒரு வீட்டிற்கு பின்னால் லலிதா (வயது 47) என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தார்.

    இதேபோல பாதூரில் பாக்கியலட்சுமி (39), என்பவரும், திருநாவலூரில் மங்கவரத்தாள் (55) என்பவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    இதையொட்டி அவர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.
    பண்ருட்டி 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து பண்ருட்டிக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நேற்று மாலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த மொபட்டை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனையிட்டனர். அதில் 152 மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நெய்வேலி இந்திராநகரை சேர்ந்த கோவிந்தன் (வயது 44), அவரது மகன் வெங்கடேசன் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிந்தது.

    உடனே 2 பேரையும் பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மதுபாட்டில்கள் கடத்திய கோவிந்தன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகாவில் இருந்து ஸ்கூட்டரில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - மத்திகிரி கூட்டு ரோடு அருகே, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில், போலீசார் மடக்கினார்கள். 

    பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்து, வண்டியை சோதனையிட்டபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரீதம் சவுத்ரி(22) என்ற அந்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 249 மது பாக்கெட்டுகள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர். மது பாட்டில் - கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    கோரிமேடு அடுத்த பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று காலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில 48 அட்டை பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிரைவரையும், அருகில் இருந்த வரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42)என்பதும், உடன் இருந்தவர் அவரது மகன் ரமேஷ் (18) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுபாட்டில் கடத்திய காரையும் பறிமுதல் செய்தனர். காரின் மதிப்பு ரூ. 10 லட்சம்.

    அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்க வாங்கி சென்றது தெரிய வந்தது.

    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர் மீது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

    இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டர் கணேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். 

    இதையடுத்து ஏற்கனே சிறையில் உள்ள குமாரிடம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை ஆலங்குடி போலீசார் வழங்கினர்.
    புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 6,034 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்: 

    புதுச்சேரியில் இருந்து ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே ஆண்டகளூர்கேட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற கார் ஒன்று குமாரமங்கலம் பிரிவு சாலை அருகே திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பரிசோதனை செய்தனர். அப்போது அதில் 6,034 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த மதுபாட்டில்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் பறிமுதல் செய்வதை அறிந்த கார் டிரைவர் ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த மதுபாட்டில்களை திருச்செங்கோட்டை சேர்ந்த ஜெகதீசன் (வயது 40) என்பவர் வாங்கி வந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை கீழே கொட்டி அழித்தனர்.
    ×