பல்லடத்தில் முன்விரோதம் காரணமாக மது பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைத்தவர் கைது

சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 30). இவருக்கும் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீரக்குமார், ஜெகதீஸ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது.

உடனே இதனை எதிர்த்து கேட்ட ஜெகதீஸ்வரனை மதுபான பாட்டிலால் பின் மண்டையில் வீரக்குமார் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com