search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggled"

    • நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நுழைந்து கைவரிசை
    • வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் அருகே உள்ள சி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் தனபால கிருஷ்ணன் (வயது 56). அவர் பொள்ளாச்சி வடக்கு தி.மு.க. துணை செயலாளராக உள்ளார்.

    இவர் தனது தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனபாலகிருஷ்ணன் தூங்க செல்வதற்கு முன்பு சந்தன மரத்தை பார்த்து விட்டு சென்றார்.

    நள்ளிரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் வெளியே வந்த தனபாலகிருஷ்ணன் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. பிரமுகரின் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்காடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் தனது ஆம்னி வேனில் பொம்மிடியில் இருந்து ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இவர் தனது ஆம்னி வேனில் மளிகை பொருட்களுடன் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலை தொடர்ந்து ஏற்காடு போலீசார் நேற்று மஞ்சகுட்டை கிராமத்தில் தீவிர வாகன சோதனை செய்தனர். அப்போது மளிகை சரக்கு கொண்டு வந்த கார்த்திக்கின் ஆம்னி வேனை மஞ்சக்குட்டை கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் வழிமறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் 5 மூட்டைகளில் சுமார் 45 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய ஏற்காடு போலீசார் போதை பொருட்களை கொண்டு வர பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நடைபயிற்சிக்கு சென்றவர் மாயமானது கண்டு அதிர்ச்சி
    • கடத்தல் கும்பல் கைவரிசையா? போலீசார் விசாரணை

    வடவள்ளி.

    கோவை குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-1 பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகள் பழமையான 2 சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்கள் மாயமானது தெரியவந்தது.

    எனவே அதிர்ச்சி அடைந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது யாரோ சிலர் மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த குற்றவாளிகள் தான் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா என்று தெரியவில்லை.இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    பல்லடம் :

    பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை கருதி வெட்ட கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு அனுமதி பெற்ற பின்பு பனை மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிலையில் பல்லடம் அருகே கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீரோடையில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சுமார் 15 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • சுண்டக்காம்பாளையத்தில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது.
    • மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் காசி கவுண்டன் புதூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 53)என்பவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-நம்பியாம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையத்தில் எனக்கு 2.20 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் இருந்தது. இந்த நிலையில் நான் கடந்த வாரம் வெளியூர்சென்று விட்டேன். அப்போது எனது தோட்டத்தில் இருந்த வேப்ப மரங்களை மூன்று நபர்கள் ஜேசிபி மூலம்வெ ட்டி கடத்திச் சென்றுள்ளனர் .

    இது பற்றி அவர்களிடம் கேட்டபோது அலட்சிய மாகவும் மிரட்டல் விடும் தொணியிலும் என்னை மிரட்டுகிறார்கள் .எனவே இது குறித்து விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளாவுக்கு லாரியில் கடத்திய 1,120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் வாகன தணிக்கை சோதனைகளை போலீசார் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சாப்டூர்- பேரையூர் ரோட்டில் மதுரை மண்டல ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு ஒரு லாரி வந்தது. அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்து பார்த்தனர்.

    அதில் 40 கிலோ கொண்ட 28 மூடைகள் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் லாரியில் கடத்தி வந்த 1120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி பாரதிராஜா (வயது 25), அய்யனார்புரம் கனிமாரி (25) என்பது தெரிய வந்தது.

    வில்லாபுரம் பாரதிராஜா ரேசன் அரிசிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக அய்யனார்புரம் டிரைவர் கனிமாரி என்பவரை கூட்டு சேர்த்துக் கொண்டு ரேசன் அரிசியை கடத்தி சென்று விற்று வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து லாரியில் ரேசன் அரிசி கடத்திச் சென்றதாக பாரதிராஜா, கனிமாரி ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.

    நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

    இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.

    இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.

    இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கோவை சரக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரின் ஈரோடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, இசக்கி மற்றும் போலீசார் பல்லடம் கரடிவாவி சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 53), திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த ஜான்சன் பிரபு (28) என்பது தெரியவந்தது. ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி கேரளாவில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மோகன், ஜான்சன் பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து 25 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். 

    • 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரை செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் சுரேஷ் குமார் (வயது 44 ). நெல்லை மாவட்டம் வெள்ளக்கல்லை சேர்ந்த ராமையா என்பவரது மகன் முருகன் (42). இவர் தற்போது பொல்லிக்காளிபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் இருவரிடமிருந்து 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வினீத் 2பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்தார். இதனை தொடர்ந்து 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    • அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் வாகனத்தின் உள்ளே ரேசன் அரிசி மூட்டைகள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் அதிலிருந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கோவையைச் சேர்ந்த சந்தோஷ்(35 )என்பதும், 3 டன் ரேசன் அரிசியை வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது .இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார்.
    • இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மது கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் புஞ்சை புளிய ம்பட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஜே. ஜே. நகர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்து செய்தனர். அப்போது அதில் 180 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் மதுவை கடத்தி வந்தவர் கோவை மாவட்டம் சிறுமுகை சித்தார்த்தர் வீதியைச் சேர்ந்த மாரிசாமி (34) என தெரிய வந்தது. இவர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் மாரிசாமியை கைது செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • டிப்பர் லாரியில் குண்டு கற்கள் கடத்தி வரப்பட்டது.

    நெல்லை:

    ராதாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் சிங்காரதோப்பு மாசான சுடலைசுவாமி கோவில் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குண்டு கற்கள் இருந்தது.

    அதற்குரிய ஆவணங்களை சரிபார்த்தபோது அனுமதி சீட்டில் தேதி மற்றும் நேரத்தை திருத்தி, போலியாக வைத்து கொண்டு லோடு ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான கண்ணநல்லூர் மேலூரை சேர்ந்த குருநாராயணனை(வயதது 30) கைது செய்தனர்.

    ×