

பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் சுரேஷ் குமார் (வயது 44 ). நெல்லை மாவட்டம் வெள்ளக்கல்லை சேர்ந்த ராமையா என்பவரது மகன் முருகன் (42). இவர் தற்போது பொல்லிக்காளிபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் இருவரிடமிருந்து 800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வினீத் 2பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்தார். இதனை தொடர்ந்து 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.