பொள்ளாச்சி அருகே தி.மு.க. பிரமுகர் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டி கடத்தல்

நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் நுழைந்து கைவரிசை வடக்கிப்பாளையம் போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே தி.மு.க. பிரமுகர் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டி கடத்தல்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் அருகே உள்ள சி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் தனபால கிருஷ்ணன் (வயது 56). அவர் பொள்ளாச்சி வடக்கு தி.மு.க. துணை செயலாளராக உள்ளார்.

இவர் தனது தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனபாலகிருஷ்ணன் தூங்க செல்வதற்கு முன்பு சந்தன மரத்தை பார்த்து விட்டு சென்றார்.

நள்ளிரவு தோட்டத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். மறுநாள் காலையில் வெளியே வந்த தனபாலகிருஷ்ணன் சந்தனமரம் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தி.மு.க. பிரமுகரின் தோட்டத்தில் 17 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com