என் மலர்
நீங்கள் தேடியது "heroin"
- இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் வீரர்கள் இடைமறித்து தரையிறக்கினர்
- 3.22 கிலோ அளவில் ஹெராயின் பறிமுதல்
பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக போதைப்பொருட்களை கடத்துவது கடும் சவாலாக உள்ளது. ஆகவே தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள அட்டாரி பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் பறந்துள்ளது. அதை இடைமறித்து கீழே இறக்கிய எல்லை பாதுகாப்புப்படையினர், டிரோனை சோதனையிட்டபோது அதில் 3.2 கிலோ அளவிலான ஹெராயின் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர்.
- போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்காண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஷிம்கஞ்ச் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.
பின்னர் வாகனத்தில் இருந்து 676 கிராம் ஹெராயின் என்கிற போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோப்பு கவர்களில் ஹெராயினை அடைத்து அவற்றை, ஸ்பீக்கர் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி எனவும், மிசோரமில் இருந்து பதர்கண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- படகு மூலம் கொண்டு வரப்பட்ட போதை பொருள் பாக்கெட்டுகள் கொச்சியில் பறிமுதல்.
- ஈரான் நாட்டைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை.
கொச்சி:
இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கேரளா மாநிலம் கொச்சி கடற்பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயினை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு 1,200 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெராயின் பாகிஸ்தான் வழியாக ஈரான் நாட்டு படகில் ஏற்றப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை மூத்த அதிகாரி சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பாக்கெட்டுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த தனித்துவமான அடையாளங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கடல் பகுதியில் இலங்கை கப்பலுக்கு இந்த போதை பாக்கெட்டுகள் மாற்றப்பட இருந்த நேரத்தில் அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களும், போதைப் பொருள் பாக்கெட்டுகளும் கொச்சி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
நாடு முழுவதும் போதை பொருள் கடத்தலை தடுக்க வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் மும்பை விமான நிலையம் வழியாக போதை பொருள் கடத்த இருப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாரிகள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.
இதையடுத்து அந்த வாலிபரின் டிராலி பேக்கை கைப்பற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 16 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.80 கோடி ஆகும்.
இதனை கடத்தி வந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பினு ஜான் என தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் பினு ஜானுக்கு மேலும் பலருடன் தொடர்பு இருக்கலாம் என கருதுகிறார்கள்.
இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கண்காணித்து தடுக்கும் பணியில் நமது நாட்டின் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்துக்குட்பட்ட கடல் பகுதியில் வந்த ஒரு படகை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்காக கடலோர காவல் படையினரின் ரோந்துப் படகு விரைந்து சென்றது.

அந்த படகை சுற்றிவளைத்த கடலோர காவல் படையினர் அதில் வந்த 9 பேரை கைது செய்தனர். அவர்கள் கடத்திவந்த சுமார் 100 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MarineTaskForce #IranianNationals #100kgheroin #heroinseized
காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது வாதுமை பருப்பு பைக்குள் சுமார் 10 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த காரில் வந்த முகமது அர்பி மற்றும் அவரது மனைவி ஜமிலா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் சுஞ்சாமா கிராமத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஹெராயின், காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு, லூதியானாவில் உள்ள இடைத்தரகருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Rs50croreheroin #heroinrecovered
பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள், ஆப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். குப்ராவா மாவட்டத்திலிருந்து ஹெராயின் கடத்தி வரப்படுவதாகவும், டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். #NCB #HeroinSeized
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருள்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 2 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஹெராயின் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, ஹெராயின் கடத்தியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #Heroin #JammuKashmir
ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லையோர மாநிலங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க, போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹந்த்வாரா பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 22.145 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் எனப்படும் மிக உயர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17.49 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #JammuKashmir #HeroinSeized
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெராயினை கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் போலீசார் வசம் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சுமார் 74 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #Heroinceased