search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle search"

    • போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
    • போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சில்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாஹித்பூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில், 21 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.210 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த லால்தினுவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், அசாமில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத அசாமை நோக்கிய பயணத்தில் ஒரு பெரியபடியாக இந்த நடவடிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    • மர்ம ஆசாமிகள் வந்த காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலை பூங்குணம் ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்,போக்குவரத்து போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.காரில் கட்டு கட்டாக பணம், நகை இருந்தது தெரியவந்தது. காரின் சாவியை போலீசார் எடுத்தனர். இதனால் ஆத்திரமடை ந்த காரில் வந்த 3 பேர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கத்தியால் போலீசாரை தாக்கமுயன்றனர்.அதிர்ஷ்டவசமாக அவர்களின் கொலை வெறி தாக்குதலில் இருந்து போலீசார் காயம் இன்றி தப்பினார். பின்னர் கண்ணிமை க்கும் நேரத்தில் காரில் இருந்த பணம் நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர்.வாகன சோதனையில் இருந்தபோக்குவரத்துபோலீசாரை தாக்கம் முயன்றுகொலை மிரட்டல் விடுத்து 3 பேர் தப்பிய தகவல் அந்த பகுதியில்காட்டுத்தீ போல பரவியது.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுபழனி இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, எழில்தாசன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுமர்ம ஆசாமிகள்வந்த காரை பறிமுதல்செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் . மேலும் கடலூரில் இருந்து 2 போலீஸ் மோப்ப நாய்கள் கூப்பர், வெற்றி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சித்திரச்சாவடி, கணிசப்பாக்கம், வி.ஆண்டி குப்பம் வழியாக பண்ருட்டிக்கு ஓடி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    போக்குவரத்து போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய ஓடிய மர்ம ஆசாமிகள் வந்த காருக்கு 4 நம்பர் பிளேட் இருந்தது. காரின் நம்பர் போலி எனவும், மர்ம நபர்கள் திருச்சி, திண்டுக்கல் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சென்னைக்கு செல்ல பண்ருட்டி வழியாக வந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மூட்டைக்குள் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மன்னார்குடி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி அடுத்த காசாங்குளம் மேம்பாலம் அருகே கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கல்விக்கரசன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமை காவலர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மூட்டை ஒன்று இருந்தது. அந்த மூட்டையில் சோதனை செய்ததில் அதில் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் ஆகும்.

    மேலும், மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய திருநெல்லிக்காவல் அடுத்த மேலமாறங்குடியை சேர்ந்த அஜித் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மன்னார்குடி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேைர நிறுத்தினார்கள். அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் கள் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முத்து (34), டி. அரியலூரை சேர்ந்த சிவா என்கிற சின்ன கவுண்டர்(31) என்பது தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 10மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • பண்ருட்டியில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கடத்திய புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தீபாவளி ஒட்டி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் புதுவை யில் இருந்த அரசு அனுமதி இல்லாமல் கள்ள த்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு பண்ரு ட்டியில் விற்பனை செய்யப்படு வதாக போலீ சாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் (பொறுப்பு) நந்த குமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுவை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ஏராளமான புதுவை மது பாட்டிகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகி ன்றனர். இதே போல புதுப்பேட்டை, காடாம்பு லியூர், முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.

    ×