மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது

மூட்டைக்குள் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதான அஜித் மற்றும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.
கைதான அஜித் மற்றும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.
Published on

மன்னார்குடி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி அடுத்த காசாங்குளம் மேம்பாலம் அருகே கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கல்விக்கரசன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமை காவலர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மூட்டை ஒன்று இருந்தது. அந்த மூட்டையில் சோதனை செய்ததில் அதில் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் ஆகும்.

மேலும், மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய திருநெல்லிக்காவல் அடுத்த மேலமாறங்குடியை சேர்ந்த அஜித் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மன்னார்குடி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com