திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது: வாகன சோதனையில் சிக்கினர்

திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது: வாகன சோதனையில் சிக்கினர்
Published on

விழுப்புரம்:

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேைர நிறுத்தினார்கள். அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் கள் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த முத்து (34), டி. அரியலூரை சேர்ந்த சிவா என்கிற சின்ன கவுண்டர்(31) என்பது தெரிய வந்தது.அவர்கள் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 10மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com