search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka confiscation"

    • கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது.
    • ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் ராமாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பார்த்த போது ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 183 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமாபுரம் சேர்ந்த ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆள வந்தார், அனவரதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பண்ருட்டி, விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பாதிரிப்புலியூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், முத்தாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    கடலூர்:

    நெய்வேலி அருகே பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே ஊமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கார் மற்றும் இரண்டு நபர்களை பிடித்து வந்து ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சங்கர் ராம் (வயது 34), லக்குமா ராம் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 16 மூட்டைகள் ஹான்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா, 12 மூட்டைகள் புகையிலை போன்றவற்றை கொண்டு வந்தது தெரிய வந்தது . மேலும் இதன் எடை சுமார் 350 கிலோ 6 லட்சம் மதிப்பாகும். 

    இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராம், லக்குமா ராம் ஆகியோரை கைது செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    விழுப்புரம், அக்.9-

    விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றி குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை கொண்டு செல்வோரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) தலைமை யிலான போலீசார் மற்றும் தனிப்படை பிரிவு போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர்.

    அதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 500 கிலோ எடை கொண்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இதற்கு காரணமான விழுப்புரம் கே. கே. ரோடு மாந்தோப்பு தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23), கீழ்பெரும்பாக்கம் மீனாட்சி ரைஸ் மில் தெருவை சேர்ந்த சுல்தான் மைதீன் ஆகிய 2 பேரை பேரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    போடி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையிலான தனிப்படை பிரிவினர் தேனி மாவட்டம் போடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து போடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த வாகனத்தில் சுமார் 40 பெட்டிகளில் குட்கா மற்றும் பான் மசாலா இருந்தது தெரிய வந்தது. இதனை கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் லாரி மற்றும் குட்காவை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    விசாரணையில் முக்கிய குற்றவாளியாக போடி ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த மகேஷ் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மகேஷ் ராஜா தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யபட்டுள்ளது. குட்கா பான் மசாலா போன்றவை பெட்டி பெட்டியாக விற்பனைக்காக கொண்டு பதுக்கி வைத்துள்ள சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கி விற்பனை செய்யப்படுவதும் குற்றச்செயலாகும். தற்போது கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருட்கள் வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்றும் இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். #tamilnews

    கேரளாவுக்கு காரில் கடத்திய 25 கிலோவுக்கும் மேல் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
    கோவை:

    கோவை மாநகர் தெற்கு சரக உதவி கமி‌ஷனர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் போத்தனூர் போலீசார் நேற்று நள்ளிரவு ஈச்சனாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்சீட்டில் சிறு, சிறு மூட்டைகள் கிடந்தன. இதுகுறித்து கேட்ட போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அது தடை செய்யப்பட்ட குட்கா என்பது தெரியவந்தது.

    25 கிலோவுக்கும் மேல் குட்காவை கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த சுதிர் (33), அனஸ்(22), ஆலுவாவை சேர்ந்த சித்திக்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து இவற்றை வாங்கிச் செல்வதாக கூறி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், குட்கா பிடிபட்டது குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம், கைப்பற்றப்பட்ட குட்கா மூட்டைகளை ஒப்படைத்து விடுவோம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேல்விசாரணை நடத்துவார்கள் என்றனர். #Gutka
    ×