பண்ருட்டியில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கடத்திய புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல்

பண்ருட்டியில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கடத்திய புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.
மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட  புதுவை மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட புதுவை மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தீபாவளி ஒட்டி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் புதுவை யில் இருந்த அரசு அனுமதி இல்லாமல் கள்ள த்தனமாக மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு பண்ரு ட்டியில் விற்பனை செய்யப்படு வதாக போலீ சாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் (பொறுப்பு) நந்த குமார், சப் இன்ஸ்பெ க்டர் சரண்யா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ஏராளமான புதுவை மது பாட்டிகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகி ன்றனர். இதே போல புதுப்பேட்டை, காடாம்பு லியூர், முத்தாண்டிக் குப்பம் பகுதியில் தீவிர மது வேட்டை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com