பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல்

இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் வீரர்கள் இடைமறித்து தரையிறக்கினர்3.22 கிலோ அளவில் ஹெராயின் பறிமுதல்
பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல்
Published on

பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக போதைப்பொருட்களை கடத்துவது கடும் சவாலாக உள்ளது. ஆகவே தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள அட்டாரி பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் பறந்துள்ளது. அதை இடைமறித்து கீழே இறக்கிய எல்லை பாதுகாப்புப்படையினர், டிரோனை சோதனையிட்டபோது அதில் 3.2 கிலோ அளவிலான ஹெராயின் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com