search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Recommendation"

  • விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது
  • இதில் நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், திரிஷா, சமந்தா பெயர் இடம் பெற்று உள்ளது

  பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

  தற்போது இப்படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது. அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்குகிறது.

  வருகிற 14 - ந்தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுகிறது. மேலும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு GOAT படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
  கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.அதை தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார்.

  வருகிற 2026- ல் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். 'தளபதி - 69' படத்திற்கு பிறகு சினிமா நடிப்பில் இருந்து விலகுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

  இந்நிலையில் தளபதி- 69 படத்தில் விஜய் யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் எச்.வினோத்துக்கு கிடைத்தது. அவரின் ஸ்கிரிப்ட்டை விஜய் அங்கீகரித்தார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.வருகிற 'மே' மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் தளபதி - 69 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. மேலும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் விஜய்யுடன் இதுவரை நடிக்காத ஒருவரை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 4 கதாநாயகிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  இதில் பிரபல நடிகை மிருனால் தாக்கூர், பாலிவுட் நாயகி அலியா பட், மற்றும் திரிஷா, சமந்தா ஆகியோர் பெயர் இடம் பெற்று உள்ளது. இதில் மிருனால் தாக்கூர், அலியா பட் ஆகியோரில் ஒருவருக்கு தளபதி 69 படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

  மேலும் இயக்குனர் எச்.வினோத், நடிகர் விஜய் இருவரும் இணைந்து விரைவில் கதாநாயகியை முடிவு செய்ய உள்ளனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இ.சி.ஜி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
  • முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

  பாபநாசம்:

  பாபநாசம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மற்றும் பாபநாசம் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கீர்த்திவாசன் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் பாபநாசம் திருப்பாலைத்துறை ரோட்டரி சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

  பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார்.

  பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கீர்த்தி வாசன், பிரேம்நாத் பைரன், துரைமுருகன், தேன்மொழி உதயகுமார், முத்துமேரி மைக்கேல் ராஜ், புஷ்பா சக்திவேல், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கோட்டையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பாபநாசம் போலீஸ் துணை சூப்பரண்ட் பூரணி கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

  இம்முகாமில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் ஆனந்த், அனு அனன்யா, வர்ஷா, ராஜாத்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பொது மக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

  இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 25 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

  முகாமில் மருத்துவமனை மார்க்கெட்டிங் மேனேஜர் பூபதிகுமார், உதவி மேனேஜர் பழனிவேல், ரோட்டரி சங்க பொருளாளர் ஆனந்தன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில்நாதன், பிரான்சிஸ் சேவியர், விவேகானந்தம், முருகானந்தம், ராஜேந்திரன், வெங்கடேசன், பக்ருதீன் அலி அகமது, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

  • திருபுவனம் மேலவீதியை சேர்ந்த சிவா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
  • காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் மேலவீ தியை சேர்ந்தவர் சிவா (வயது 22).

  இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

  இதையடுத்து இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  என்று மாவட்ட கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

  அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி சிவாவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

  இதேப்போல் திருவிடை மருதூர் தாலுகா அம்மாச த்திரம் காமராஜ் நகரை சேர்ந்த கீர்த்தி (26) என்பவரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

  • ஜெயக்குமார் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
  • கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை அடுத்த கூடலூர் புது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38).

  இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

  இதனால் ஜெயக்குமாரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை கொண்டு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

  அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி ஜெயக்குமாரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
  • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

  நாகப்பட்டினம்:

  நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

  அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

  ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

  இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

  இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

  உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

  இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

  .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

  • பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது.
  • பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது.

  புதுச்சேரி

  இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 25 ஏழை பெண்களுக்கு 'பசு மித்ரா' என்ற தலைப்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது. பயிற்சி முகாமை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்து பேசியதாவது:-

  பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே வங்கியின் தலைமை நிர்வாகத்தில் உள்ளனர். இவர்களுக்கு புதுவை மக்கள் பேசக்கூடிய தமிழ் தெரிவதில்லை. இதனால் மக்கள் தங்களது தேவைகளை தெளிவாக கூறினாலும், அதை வங்கி அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

  இந்த நிலை மாற வேண்டும். தகுதியான நபர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்டவைகள் சிபாரிசின்றி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அமிர்தவள்ளி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், டாக்டர்கள் குமணன், கவுதமன் மற்றும் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகளின் செயல் தலைவர் தேவ. பொழிலன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்ய மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டார்

  கரூர்:

  கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலை ராமானுஜம் நகரை அடுத்த தெற்கு குமரன் நகரைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (வயது 86) இவரது மனைவி பழனியம்மாள் (77) இவர்களுக்கு குமாரசாமி என்ற மகனும், இருமகள்களும் உள்ளனர்.

  கடந்த 2014-ம் ஆண்டு பழனியம்மாள் பெயரில் இருந்த வீட்டை குமாரசாமியின் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளனர். அந்த வீட்டில் வசித்து வரும் குமாரசாமி முதல் தளததை ரூ.3 லட்சம் ஒத்திககும், 2-வது தளத்தை ரூ.8 ஆயிரம் வாடகைக்கும் விட்டுள்ளார்.

  இந்நிலையில் குமாரசாமி தனது பெற்றோரைப் பராமரிக்காததுடன் அவர்களை வீட்டில் இருந்தும் வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை வீட்டில் வசிக்கும் பூவலிங்கம், பழனியம்மாள் தம்பதினர் இது தொடர்பாக கரூர் உதவி கலெக்டர், மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயத்தின் தலைவரிடமும் கடந்த ஜனவரி 28-ந்தேதி மனு அளித்தனர்.

  அதில் மகனுக்கு தாங்கள் எழுத கொடுத்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்யக் கோரியும் பராமரிப்புத் தொகை பெற்றுத் தருமாறும் குறிப்பிட்டிருந்தனர். தீர்ப்பாயத்தின் அப்போைதய தலைவர் சந்தியா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் பூவலிங்கம், பழனியம்மாள், குமாரசாமி ஆகியோரிடம் கடந்த மே 10,11 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தினார்.

  அந்த விசாரணையில் தனது பெற்றோரின் பராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் ரூ.1,300 வழங்கி வருவதாகவும், அதை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரித்து வழங்க முடியு என்றும் அதற்கு மேல் பணம் வழங்க முடியாது என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து குமாரசாமிக்கு எழுதிக் கொடுத்த வீட்டின் உரிமையை ரத்து செய்யக் கோரி பத்திரப்பதிவு செய்யப்பட்ட மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு தீர்ப்பாயத்தின் தலைவர் சந்தியா பரிந்துரை செய்துள்ளார்.    

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #Perarivalan #RajivGandhiCase
  சென்னை:

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, கவர்னர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழக அமைச்சரவை முடிவினை ஏற்று, அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் கவர்னர், அவர்களை உடனடியாக விடுதலை செய்யும் ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் கவர்னர் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய தி.மு.க. அரசு அளித்த பரிந்துரையை கவர்னர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.

  எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் கருணை மனுவை கவர்னர் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

  கடந்த பல ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவித்து தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வரலாற்று வாய்ப்பு தமிழக கவர்னருக்கு கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி விரைந்து நல்லதொரு முடிவை எடுக்குமாறு கவர்னரை கேட்டுக்கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கவர்னர் எடுக்க போகும் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். அவரின் முடிவு, 7 பேரின் விடுதலை தொடர்பாக நடைபெற்று வந்த நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு ஒரு இறுதி முடிவாக, நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நிஜாமுதீன் உள்பட பலர் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #RajivGandhiassassinationcase
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

  இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
   
  இதையடுத்து, சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

  சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


  இந்த பரிந்துரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  இந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, ‘இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு கவர்னரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

  ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார்  என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  #7convictsrelease #subramanianSwamy #TNgovernor  #RajivGandhiassassinationcase
  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #Arputhammal
  சென்னை:

  தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது.

  இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள், முதல்வர் பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து நன்றி கூறினார்.  முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பின் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. முழு நிம்மதியை அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

  27 ஆண்டு வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது; பரிந்துரை மீது விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார். 7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #Arputhammal