என் மலர்

  நீங்கள் தேடியது "Arputhammal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit
  வேலூர்:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்துள்ளது.

  இதுபற்றி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

  பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசு 3 முறை அறிவித்த பிறகும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.  28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அறிவு (பேரறிவாளன்) பற்றிய உண்மைகள் வெளிவந்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை திருத்தி எழுதிவிட்டேன். அதை அப்படியே எழுதியிருந்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பார் என பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  அரசு இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது. உன் மகனை உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் உடனடியாக கையெழுத்திட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த முறையாவது நல்லது நடக்க வேண்டும் என கண் கலங்கினார். அற்புதம்மாள் #RajivGandhiAssassinationcase #BanwarilalPurohit


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
  சென்னை:

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
   
  அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

  இதற்கிடையே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார். 

  இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன.  

  பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

  இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். #Arputhammal
  கடலூர்:

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

  இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

  அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

  இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.

  அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

  மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.

  ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #Arputhammal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Arputhammal #Governor
  கரூர்:

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் நீண்ட காலமாக சிறையில் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மாவட்டந்தோறும் சென்று மக்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்.

  அதன்படி கரூர் ஜவகர்பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் குற்றத்தின் தன்மை அறிந்து மனம் திருந்த அமைக்கப்பட்டது தான் சிறைச்சாலை. மாறாக அவர்களை சித்ரவதை செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டது அல்ல. சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 28 ஆண்டுகளாக அந்த 7 பேர் சிறையில் இருக்கிறார்கள்.  அதே சட்டத்தின் பால் பணியாற்றும் தமிழக கவர்னர், கொலை குற்றவாளிகள் என கருதப்படும் அந்த 7 பேரையும் உடனே விடுதலை செய்ய கையெழுத்திட வேண்டும். கவர்னர் கையெழுத்திடும் வரை எனது மக்கள் சந்திப்பு பயணம் தொடரும். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியான அடுத்த கனமே எனது பயணத்தை ரத்து செய்வேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #Arputhammal #Governor
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். #Arputhammal #Perarivalan
  தேனி:

  தேனியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினர்.

  நானும் நேரடியாக கவர்னரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக பரிந்துரை செய்வதாக கூறினார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் அந்த கோப்பில் கையெழுத்திடாமல் உள்ளார்.

  இந்த வி‌ஷயத்தில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறுகிறார். கவர்னர் ஏன் தாமதிக்கிறார்? அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்? என்பது தெரியவில்லை.

  ஏற்கனவே விடுதலையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த 7 பேரும் மீண்டும் காத்திருப்பது கொடுமையானது. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் எதிர்ப்பால் விடுதலை அறிவிப்பு சாத்தியமின்றி போனது. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்கு தற்போது 47 வயதாகிறது.  28 வருடங்களாக சிறை வாழ்க்கையை அனுபவித்த அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு தாயாரின் கடமையாக நினைத்து முயற்சி எடுத்து வருகிறேன். தமிழக மக்கள் மற்றும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் எனது கோரிக்கையை ஆதரிக்கின்றனர். இப்பிரச்சினையில் அரசே ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதில்லை. 7 பேர் விடுதலைக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

  இவ்வாறு அவர் பேசினார். #Arputhammal #Perarivalan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என் மகன் விடுதலையாகும் வரை மக்களை சந்தித்து முறையிடுவேன் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறினார். #Arputhammal #Perarivalan
  கோவை:

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ‘மாநிலம் தழுவிய மக்கள் சந்திப்பு’ பயணத்தை கோவையில் நேற்று தொடங்கினார். முன்னதாக அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-  28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக போராடி வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையை கூட்டி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளனர். இதில் கவர்னர் உடனடியாக கையெழுத்திடுவதே முறையாகும். கவர்னர் 4½ மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.

  எனவே மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். மக்களின் கருத்துகளை கேட்டு இறுதி போராட்டம் பற்றி முடி வெடுப்பேன். எனது இந்த பயணம் 7 பேர் விடுதலைக்கானது. அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்வரை எனது பயணம் தொடரும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Arputhammal #Perarivalan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

  திருவாரூர்:

  திருவாரூரில் தமிழர் தன்மான பேரவை சார்பில் நேற்று இரவு கருத் தரங்கம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசினார்.

  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு உரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் சில அரசியல் காரணங்களால் விடுதலை செய்யாமல் இருந்து வருகின்றனர். இதில் அரசை குறை கூட முடியாது. 7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு, கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும்.

  மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்த பிறகு கவர்னர் ஏன் கையெழுத்திட மறுத்து வருகிறார் என்று தெரிய வில்லை. 7 பேரும் சட்டத்தை மதித்து கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டு கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுமாறு அற்புதம்மாள் கவர்னரிடம் மனு அளித்தார். #Rajivcaseconvicts #Arputhammal #Governor
  சென்னை:

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

  இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந்தேதி அறிவுறுத்தியது.

  இதை தொடர்ந்து தமிழக அமைச்சரவை கடந்த 9-ந்தேதி கூடி ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அறிவித்து இருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று கவர்னர் பன்வாரிலாலை சந்தித்தார்.

  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் கவர்னரிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் மனு ஒன்றையும் அளித்தார்.

  கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

  7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரிடம் மனு அளித்தேன். அதனை முழுமையாக படித்து பார்த்தார். நான் கொடுத்த மனுவில் பேரறிவாளன் பரோலில் வந்தபோது எப்படி இருந்தான் என்பதையும் அதே போலவே நடந்து கொள்வார் என்றும் தெரிவித்து இருந்தேன்.  ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தாமசின் கருத்தையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளேன். வழக்கில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால் இவர்களை விடுவிக்கலாம் என்று அவர் கூறி இருந்த கருத்தை பதிவு செய்துள்ளேன்.

  மேலும் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் கூறி இருந்த கருத்துக்கள் தொடர்பான சி.டி ஒன்றையும் வழங்கினேன் அனைத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.

  கவர்னர் எனது கோரிக்கையை கனிவுடன் கேட்டார். மனுவை விரைவில் கவனித்து முடிவு செய்வதாக உறுதி அளித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rajivcaseconvicts #Arputhammal #Governor
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது குறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #Arputhammal
  சென்னை:

  தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது.

  இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள், முதல்வர் பழனிசாமியை நேரில் சென்று சந்தித்து நன்றி கூறினார்.  முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த பின் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. முழு நிம்மதியை அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

  27 ஆண்டு வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது; பரிந்துரை மீது விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார். 7 பேர் விடுதலை தொடர்பாக யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #Arputhammal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அற்புதம்மாள் கூறியுள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SC
  சென்னை:

  ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருக்கிறார். வண்டலூர் ஓட்டேரி இல்லத்தில் அவரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இது குறித்து பேரறிவாளனின் தாயார் நிருபருக்கு பேட்டி அளித்தார்.

  அப்போது அவரிடம் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

  கேள்வி:-பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறதே?

  பதில்:-இப்போது தான் கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 27 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறது. மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை நீதிபதிகள் உறுதி செய்து இருக்கிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மேலும் சிறையில் வைக்க வேண்டாம், வெளியே விட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்கள்.  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை கருத்தில் கொண்டு, கவர்னரிடம் ஆலோசனை செய்தோ அல்லது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை போல் சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியோ என் மகன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுகோள். இந்த விஷயத்தில் இனியும் கால தாமதம் செய்யக்கூடாது.

  கேள்வி:- முதல்-அமைச்சரை சந்தித்து, அவர்களின் விடுதலை குறித்து நேரில் வேண்டுகோள் விடுக்க இருக்கிறீர்களா?

  பதில்:- இந்த தீர்ப்பின் முழு விவரம் வந்ததும் நான் முதல்-அமைச்சரை சந்திப்பேன். நாளைக்கு (இன்று) போகலாம் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் முழு விவரம் வேண்டும், மனு தயார் செய்ய வேண்டும் அல்லவா?. வக்கீல்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கேட்டு மனு தயார் செய்ய வேண்டும்.

  கேள்வி:-இந்த தருணம் உங்களுக்கு எப்படி உள்ளது?

  பதில்:-நம்பிக்கையாக இருக்கிறதுப்பா...

  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.  #RajivCaseConvicts #Perarivalan #SC

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து மூலம் பேரறிவாளன் குற்றமற்றவர் என நிரூபணமாகியுள்ளது என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறி உள்ளார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan
  வேலூர்:

  டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டைரக்டர் பா.ரஞ்சித் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டுமென ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.  அதற்கு ராகுல்காந்தி, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன். தன் தந்தை கொலை தொடர்பான சதித்திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்கும் என கருதுவதாக ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.

  ராகுல் காந்தியின் கருத்து தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:-

  பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலைக்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இதன் மூலம் ராஜீவ்காந்தி கொலையில் பேரறிவாளன் சம்பந்தப்படவில்லை என்று வெளிப்பட்டுள்ளது.

  திசை மாறிபோன இந்த வழக்கை, சரியான திசை நோக்கி கொண்டு சென்றது பேரறிவாளன் தான். இந்த வழக்கில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. அது தற்போது ராகுல்காந்தி கருத்து மூலம் வெளிப்பட்டிருக்கிறது.  கடந்த 27 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்டோரை ஜெயிலில் அடைத்திருப்பது, இந்தியாவிலேயே வேறு எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுபோன்று தண்டிக்கப்படவில்லை.

  தடா வழக்கில் இருந்தவர்களை கூட மாநில அரசு விடுதலை செய்துள்ளது. அப்போது எதிர்க்காத மத்திய அரசும், ஜனாதிபதியும் தற்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் என்ற ஒரே ஒரு பதவி தான் காரணம்.

  எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமர் தான். இன்னும் எத்தனை வருடம் இந்த காரணத்தை சொல்லி இந்த வழக்கை கொச்சைப்படுத்த போகிறார்கள். ராகுல் காந்திக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு விபரம் முழுமையாக தெரியும்.

  பேரறிவாளன் உள்பட அனைவரையும் பற்றி தெரிந்த பிறகே ராகுல்காந்தி விடுதலை சம்பந்தமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். இன்னும் காலம் தாழ்த்தினால் உலக நாடுகளில் இந்த வழக்கு கேவலப்பட்டு நிற்கும்.

  எல்லா அரசியல்வாதிகளும் ஆதாயத்திற்காகவே பேசுகின்றனர். இந்த 27 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது அது தான். டைரக்டர் பா.ரஞ்சித்தை பற்றி தவறாகவே சொல்ல மாட்டேன். எப்பவும் எங்கள் மீது பாசமாக இருப்பார். நாங்கள் உயிர் வலி ஆவண படம் தயார் செய்யும் போது எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து பணம் உதவி செய்தவர் பா.ரஞ்சித்.

  பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை செயல் வடிவமாக மாற்றுவதற்கு மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் என் பிள்ளையை விடுதலை செய்ய வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #Rahulgandhi #Arputhammal #Perarivalan