search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரறிவாளன்"

    அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார். ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    பேரறிவாளனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்ற கேள்விக்கு, ‌உச்சநீதி மன்றமே அவரை விடுதலை செய்துள்ளது எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.

    மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

    மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    நீலாம்பூர்:

    கோவை சூலூர் சின்னியம்பாளையத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இரட்டை வேடத்தின் உச்சகட்டமாக பேரறிவாளன் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளது. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது வேதனையளிக்கிறது.

    மேலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான நாளன்று ஊட்டி சென்ற முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருப்பதாகவும், இது கூட்டணிக் கட்சியான காங்கிரசின் உணர்வுகளுக்கு 100 சதவீதம் எதிராகவும் அமைந்துள்ளது.

    நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 கோடிக்கு மேலான உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்னர். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு கலால் வரியை குறைத்தது போல மாநில அரசும் குறைக்க வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விலையைக் குறைக்க வேண்டும்.

    அ.தி.முக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தி.மு.கவை எதிர்த்து வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். மத்தியிலே பா.ஜ.கவுடன் கூட்டணி. மாநிலத்திலேயே அ.தி.மு.கவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் இருந்து வருகிறது.

    தேங்காய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. இதனால் பல லட்சம் தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய-மாநில அரசுகள் தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை நம்பியுள்ள விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×