search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் - அற்புதம்மாள்
    X

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் - அற்புதம்மாள்

    பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். #Arputhammal #Perarivalan
    தேனி:

    தேனியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினர்.

    நானும் நேரடியாக கவர்னரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக பரிந்துரை செய்வதாக கூறினார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் அந்த கோப்பில் கையெழுத்திடாமல் உள்ளார்.

    இந்த வி‌ஷயத்தில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறுகிறார். கவர்னர் ஏன் தாமதிக்கிறார்? அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்? என்பது தெரியவில்லை.

    ஏற்கனவே விடுதலையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த 7 பேரும் மீண்டும் காத்திருப்பது கொடுமையானது. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் எதிர்ப்பால் விடுதலை அறிவிப்பு சாத்தியமின்றி போனது. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்கு தற்போது 47 வயதாகிறது.



    28 வருடங்களாக சிறை வாழ்க்கையை அனுபவித்த அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு தாயாரின் கடமையாக நினைத்து முயற்சி எடுத்து வருகிறேன். தமிழக மக்கள் மற்றும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் எனது கோரிக்கையை ஆதரிக்கின்றனர். இப்பிரச்சினையில் அரசே ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதில்லை. 7 பேர் விடுதலைக்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Arputhammal #Perarivalan
    Next Story
    ×