என் மலர்
நீங்கள் தேடியது "delhi university"
- தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்தார்.
- அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஆர்எஸ்எஸ் உடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு வெற்றி பெற்றது.
இந்நிலையில் மாணவர் யூனியனின் இணை செயலாளரான தீபிகா ஜா மற்றும் 2 ஏபிவிபி உறுப்பினர்கள் நேற்று ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தீபிகா ஜா ஆசிரியரின் கன்னத்தில் அறையும் வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில் வடக்கு வளாகத்தில் செயல்படும் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுஜித் குமார் என்ற அந்த ஆசிரியர் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அண்மையில் கல்லூரி கவுன்சில் தேர்தலில் வென்ற தேசிய மாணவர் சங்க உறுப்பினரை ஏபிவிபி உறுப்பினர்கள் தாக்கியது குறித்து அலுவலக அறையில் போலீசார் முன்னிலையில் விசாரித்துக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சக ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏபிவிபி தலைவர்கள் மூவர் மாணவிகள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
- அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிஏ, எம்ஏ பட்டப் படிப்பு குறித்து 2016ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த சமயத்தில் ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த அப்போதைய தகவல் ஆணையர் ஆச்சார்யலு, மோடியின் பிஏ சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 2017இல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து சான்றிதழை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, மோடியின் சான்றிதழை டெல்லி பல்கலைக்ழகம் வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
- சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிபுராவை சேர்ந்தவர் சினேகா தேப்நாத் (வயது 19). இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.
இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார். அவர் அன்றைய தினம் காலையில் தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அருகே உள்ள ரெயில் நிலையத்துக்கு செல்வதாக கூறி உள்ளார்.
அதன்பிறகு வெகுநேர மாகியும் அவர் அறைக்கு திரும்பாமல் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக ஒரு கார் டிரைவர் கூறினார். அதேபோல் அந்த பாலத்தின் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனதாகவும் சிலர் கூறி இருந்தனர்.
இதையடுத்து நிகம்போத் காட் பகுதி முதல் நொய்டா வரையிலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் கீதா காலனி மேம்பாலம் அருகே யமுனை ஆற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது 6 நாட்களுக்கு முன்பு மாயமான சினேகாவாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர்கள் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது சினேகா என்பதை உறுதிபடுத்தினர். இதைத்தொடர்ந்து சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சினேகா தேப்நாத் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஏற்கனவே கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், நான் ஒரு தோல்வி அடைந்தவளாகவும், சுமையாகவும் உணர்கிறேன் என கூறி இருந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளைஞர்களிடையே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
- டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
காதல் தோல்விகள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து புதிய பாடத்திட்டம் டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
காதல் தோல்விகள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள 'Negotiating Intimate Relationships' புதிய பாடத்திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
டேட்டிங் செயலிகள் பயன்பாடு அதிகரிப்பு, காதல் தோல்வி, தகாத உறவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இளைஞர்களிடையே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை இந்தப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் பாடத்திட்டம் அன்பையும் நட்பையும் புரிந்துகொள்வது, மற்றும் ஆரோக்கியமான பிணைப்புகளை உருவாக்குதல் வரை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த பாடத்திட்டம் குறித்து பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் நவீன் குமார், "இன்றைய இளைஞர்கள் சிக்கலான சவால்களை எதிர்கொள்கின்றனர். பெற்றோர் இருவரும் வேலை செய்வதால் அவர்களின் சுதந்திரம் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள், ஆனால் எல்லைகள் எங்கே இருக்கின்றன என்று அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உறவு முறிவுகளுக்கு வழிவகுக்கிறது.
இந்தப் பாடத்திட்டம் கோட்பாட்டை நேரடி கற்றலுடன் இணைக்கிறது. இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று விரிவுரைகள் மற்றும் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
- எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார்.
- இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல்காந்தி நேற்று டெல்லி பல்கலைக் கழகத்தின் வடக்கு வளாகத்துக்கு சென்றார்.
அங்கு அவர் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தல வர் அலுவலகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக புதிய கல்வி கொள்கை, ஜனநாயக பங்கேற்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி இடங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் திடீர் வருகைக்கு டெல்லி பல்கலைக்கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராகுல்காந்தியின் திடீர் வருகை பல்கலைக்கழக நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது. மாணவர்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் இருந்தது.
எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் ராகுல் காந்தி பல்கலைக்கழகத்திற்கு திடீரென 2-வது முறையாக வந்துள்ளார்.
அவர் ஒரு மணி நேரம் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அந்த நேரம் முழுவதும் அந்த பகுதி பாதுகாப்பு பணியாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டது.
யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. துறை செயலாளர் தனது அலுவலகத்திற்கு செல்லவும் முடியவில்லை. அவரை இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்கள் அறைக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகம் இதுபோன்ற செயலை கண்டிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம். இதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
- ஆறு அறைகளில் இதை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, "இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி.
ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால், இது அமல்படுத்தப்படும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
- இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிானர்.
அப்போது அவர் பேசியதாவது:-
டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல இயக்கம். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. 100 ஆண்டு கால அடிமைத்தனம் அதன் கல்வி மையங்களை அழித்துவிட்டது. வளர்ச்சியை முடக்கியது.
சமீபத்திய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது. 2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது அது 45ஆக உயர்ந்துள்ளது.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதியை பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது .
- 'அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகமாக விளங்கும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பதற்கான ஆலோசனையை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

சட்டப்படிப்புகள் துறை சார்பாக பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் குழுவுக்கு மனுஸ்மிருதி குறித்து ஜி.என்.ஜா மற்றும் டி. கிருஷ்ணசுவாமி ஐயர் ஆகியோர் எழுதிய விளக்க புத்தகங்களை இளங்கலை முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளம்பியுள்ள இந்த முடிவுக்கு இடதுசாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பான SDTF ஆசிரியர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகளுக்கு எதிராகவும், பட்டியலினத்தர்களுக்கு எதிராகவும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மனுஸ்மிருதி கல்வி முறையை சீர்குலைக்கும் என்று அவர்கள் பலகலை நிர்வாகத்துக்கு எழுதியுள்ள எதிர்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில் பாடதிட்டத்தில் மனு ஸ்மிருதியை சேர்க்கும் முடிவை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. 'பல காலமாக அரசியலமைப்பை சூறையாட காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கனவை நினைவாக்க பிரதமர் மோடி இந்த ராஜதந்திரத்தை அரங்கேற்றியுள்ளார்' என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்ம சாஸ்திரம், பிற்போக்கான வகையில் சாதிய படிநிலைகளை வகுத்து மனிதர்களக்குக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறது என்ற சர்ச்சை நிலவுவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சை தற்போது வரை நீடிக்கிறது.
- பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம், "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






