search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "relationship"

  • தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
  • இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

  சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

  பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

   


  கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.

  இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.

  • படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
  • திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து.

  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமையும். தமிழில் இவர் சந்திரமுகி 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

  சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. அந்த வரிசையில், குடும்ப உறவு மற்றும் திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

  "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளனர். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது," என்று தெரிவித்துள்ளார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


  இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளாம்.
  பொதுவான பார்வையிலிருந்தும் கவனத்திலிருந்தும் விலகி, ஓரிடத்தில் அது வீடோ, வெளியிடமோ, யாராலும் கண்காணிக்கப்படாமல், யாருடைய தொல்லையும் இல்லாமல், தன் விருப்பப்படி இயல்பாக இருக்கும் நிலையை `பிரைவசி' எனலாம். இன்றைய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உறவுகளுக்கிடையிலும் பிரைவசி தேவையாக இருக்கிறது. சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதும், சிலவற்றைப் பகிராமல் இருப்பதும், பிறருடைய அந்தரங்க எல்லையை மதிப்பதும் அதன் அங்கம்தான்.

  தனித்து வாழ்தல் மனிதரின் இயல்பல்ல. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு மட்டுமே உரிய, அவருக்கு மட்டுமே தெரிந்த, அவருக்கு மட்டுமே சொந்தமான விஷயங்கள் பல உண்டு. அவர் அனுமதிக்காத பட்சத்தில் அவருக்கான வெளிக்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை.

  அலுவலக நண்பர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட அந்தரங்க விஷயங்களை, அவருடன் உறவு சீர்கெட்ட நிலையில் அலுவலகத்துக்குள் அம்பலப்படுத்துவதோ, பரப்புவதோ கூடவே கூடாது. அடுத்தவரின் கோப்புகள், டைரி, போன், அவர் இல்லாத நேரத்தில் திறந்து பார்த்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சக பணியாளர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது, அவர்களின் பணிக்குறிப்புகள், கணினித்திரை இவற்றைத் தேவையின்றி பார்த்தல் அவரின் அந்தரங்க எல்லையைத் தொடும் செயலே.

  அலுவலகத்தில், அலுவலகப் பணிகளுக்கே முன்னுரிமைகொடுக்க வேண்டும். மருத்துவர், மனநல ஆலோசகர், வழக்கறிஞர், செய்தியாளர், ஆலோசகர் போன்றோரிடம் ஆலோசனைக்காக வருபவர்கள், பிறரிடம் பகிர்ந்துகொள்ளாத தகவல்களைக்கூடக் கூறுவார்கள். இந்த அந்தரங்க விஷயங்களைக் கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதை வெளிப்படுத்தக் கூடாது.

  சிறியவர், பெரியவர் பேதமின்றி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் அந்தரங்கமும் மதிக்கப்படவேண்டியதே. சிறியவர்கள்தானே என்று குழந்தையின் தன்மதிப்பைக் குறைக்கும் விஷயங்களை வெளிப்படுத்தவோ கிண்டல் செய்யவோ கூடாது. அதுபோல, பதின்வயது பிள்ளைகளை குறிப்பிட்ட எல்லைவரை கண்காணிக்கலாமே தவிர, அவர்களின் தனிப்பட்ட உடைமைகளைச் சோதிப்பது தவறு. பெரியவர்கள் தம்மைப் புரிந்துகொள்வார்கள், தங்கள் மதிப்பு குறையாது என்ற நம்பிக்கை ஏற்படும்போது பிள்ளைகளும் நிச்சயம் வெளிப்படையாக இருப்பார்கள்.

  அதேபோல வீட்டில் இருக்கும் முதியவர்களின் தனி உரிமைகளும் அந்தரங்கமும் காக்கப்பட வேண்டும். நம் மீது நம்பிக்கை வைத்து நண்பர் பகிர்ந்துகொள்ளும் தனிப்பட்ட விஷயங்களை, நமக்கு நெருக்கமான வேறொருவரிடம் பகிர்வது, அந்த நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம். இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்படவில்லை எனில், நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் நட்பையும் இழக்க நேரிடும். 
  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தி குறித்து டிரம்ப் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். #DonaldTrump #VladimirPutin
  வாஷிங்டன்:

  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்துவிட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது.

  இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு டிரம்ப் பேட்டி அளித்த போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

  அது ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நான் எதையும் உள்ளே வைத்து மூடி மறைக்கவில்லை. நான் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் உடன் இருக்கமாட்டார்கள். அது பற்றி யாரும், எதுவும் கூறியது கிடையாது. ரஷியாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  #DonaldTrump #VladimirPutin
  விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
  பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.

  எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் - மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.

  மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் - மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.  கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.

  கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.

  பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
  தனது தாய் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம், பக்கத்தினர் கூறியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக் கட்டினேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

  திருப்பூர்:

  கைதான மாணவர் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

  எனது தாயின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம்,பக்கத்தினரும் என்னிடம் கூறினர். இதனால் நான் அவரை எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் என்னை மிகவும் கேலி செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்பவத்தன்று தாயை கயிற்றால் நெரித்து கொலை செய்தேன்.

  இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

  முன்பெல்லாம் உறவுகளுக்குள் இருந்த சந்தோஷமும், நெருக்கமும் இன்றைய தலைமுறையிடம் படிப்படியாக மறைந்து வருகிறது. உறவுகளின் தேவையை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
  முன்பெல்லாம் கல்யாணம் என்றதும், வீடு முழுவதும் சொந்தங்களின் வருகை நிரம்பி வழியும். ஆளாளுக்கு ஒரு வேலையைப் பார்ப்பார்கள். பலகாரங்களும், இனிப்புகளும் வீட்டிலேயே செய்யப்படும். கல்யாணம் முடிந்தும், உறவினர்களின் வருகை பந்தலை பிரிக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது.

  மணமகளின் கழுத்தில் மணமகன் தாலிக்கட்டும் நேரத்துக்கு சற்று முன்புதான், உறவினர்களே வரத்தொடங்குகிறார்கள். அதுவும் திருமணம் நடக்கும் வீட்டுக்கல்ல. கல்யாண மண்டபத்துக்கு. அப்படியென்றால், கல்யாண பந்தல் போடப்பட்டு இருக்கும் வீட்டின் நிலைமை? யாரும் இன்றி வெறிச்சோடிக் கிடப்பதுதான், அவ்வீட்டின் இன்றைய நிலைமையாகும்.

  பொதுவாக, இட வசதி இல்லாதவர்களும், ஆள்பலம் இல்லாதவர்களுமே, முன்பெல்லாம் கல்யாணத்தை மண்டபங்களில் வைத்தார்கள். கல்யாணத்துக்கு வந்து செல்பவர்களுக்கும் அது வசதியாக இருந்தது. ஆனால், இன்று எல்லா வசதிகள் இருந்தும், கல்யாணத்தை மண்டபங்களில் தான் வைக்கிறார்கள்.

  பொதுவாக, கல்யாணம் என்றால், வீடுகளில் கலகலப்பு வேண்டும். சொந்தங்களாலும், பந்தங்களாலும் கல்யாண வீடுகளை கட்ட வேண்டும். ரத்த உறவுகளின் வருகையால் மனம் சந்தோஷமடைய வேண்டும். இவையனைத்தும் இன்று கல்யாண வீடுகளில் காணாமல் போய்விட்டன. இதனால் ஏற்பட்ட உறவுகளின் பாதிப்புகளை மனித மனத்தை தனித்தனித் தீவுகளாக மாற்றிவிட்டன.

  எந்த விசேஷமாக இருந்தாலும் செல்போனில் அழைப்பது, மொய்ப்பணம் தவிர்க்கப்பட்டது என அழைப்பிதழ்களில் அச்சிடுவது, வீட்டுக்கு உறவினர்கள் வந்தால், உணவுகளை ஓட்டல்களில் வாங்கி வருவது, உடல் நலமில்லாத உறவினர்களை ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மட்டும் விசாரிக்க செல்வது, வாழ்க்கை முறையை முறைப்படுத்த தவறியது என உறவுகளை மதிக்காத மனித செயல்பாடுகளையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறோம்.

  அவ்வாறு நம் செயல்பாடுகள் மாறும்போது, தலைமுறைகளுக்கிடையே இடைவெளிகள் குறையும். மனிதநேயம் முறியாத மரமாக வளரும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது கட்டாயமாக்கப்படும். இல்லையென்றால், உறவுகளின் ஆணிவேர் அற்றுப்போகும். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப்பேசும் நிலையும் மாறிவிடும். இதை மனிதர்களான நாம் சிந்திப்போமாக...!

  எழுத்தாளர் ஜவ்வை இஜெட்
  திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை எந்த முறையில் தீர்வு கண்டு குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வரலாம் என்றும் பார்க்கலாம்.
  உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்' செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!

  தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம். பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!  உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை'விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை' சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது.

  வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி... இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் - மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை' இருக்கும் வரையில் `காசு' வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் - மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.

  சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது.
  இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும்.
  இன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்றிதழ்களுடன் வேலைக்கு அமர்ந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளானவர்கள் பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிறோம். ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டுக்கொள்கின்ற நிகழ்ச்சிகளும் நிகழவே செய்கின்றன. வாழ்க்கையில் மனிதன் வெற்றி பெற விரும்புவதில் தவறில்லை. அதற்கு நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  போலித்தனம் என்பது ஏமாற்றுகின்ற முயற்சியின் வெளிப்பாடேயாகும். ஒரு பொருள் அமோகமாக விற்பனை ஆகிறது என்றால், அது எந்தப் பெயரில் விற்பனை ஆகிறதோ, அதே பெயரில் போலிகள் வரத்தொடங்கிவிடுகின்றன. உடனே அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற நிறுவனத்தார் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதை காட்டுகிறது? பொய்யை நிஜம் போல நம்பவைப்பதில் சிலர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைத்தானே.  ஆனால் உறவுமுறைகளில் போலித்தனம் வெற்றிப்பெறுவதில்லை. நாம் நாமாக இருப்பதில்தான் நமக்கு பெருமை. நாம் இன்னொருவரைப் போல எதற்காக நடிக்க வேண்டும்? நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டிக்கொண்டு எதற்காக வாழ வேண்டும்?

  ஆனால் உறவுகளில் போலித்தனம் மிகுந்தே காணப்படுகிறது. முகத்துக்கு நேராக புகழ்பவர்கள், யாரை புகழ்ந்தார்களோ, அவர்களையே இன்னொருவரிடம் இகழ்வார்கள். இதுபோன்ற போலிகளுக்கு செல்வாக்கும் பலமும் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிரில் அளவுக்கு மீறிப் புகழ்கிறவர்களை நம்புவது ஒரு பலவீனம். இந்த உறவுகள் நெருக்கடி நேரங்களில் துணை நிற்பதில்லை.

  பொய்யான வாழ்க்கை வாழ்கின்றபோது ஒரு பொய்யை மறைப்பதற்கு பல பொய்களை சொல்ல வேண்டியிருக்கும். எப்போது எந்த பொய் காட்டிக் கொடுக்கும் என்று தெரியாது. எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன், அச்சத்துடன் வாழ வேண்டி இருக்கும். யோசித்து பார்த்தால் போலித்தனமாக வாழ வேண்டிய அவசியமே இல்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அந்த நிலையில் உறவுகளை மேற்கொண்டால் போதும். நாம் இருக்கின்றபடி நம்மை ஏற்றுக்கொண்டு நம்மிடம் உறவு செய்கின்றவர்களே நல்ல உறவினர்களாக இருப்பார்கள். அவர்களே நிலைத்து நீடிக்கக் கூடியவர்கள். பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்த பிறகு ஏற்படுகின்ற உறவுகளே இயற்கையான உறவுகளாகும்.

  ஜெ.யுகாதேவி, சமூக ஆர்வலர்
  இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இந்தி நடிகையை காதலிப்பதாக வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். பெங்களூரைச் சேர்ந்த இவர், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக விளையாடி அனைவருடைய கவனைத்தையும் ஈர்த்தார்.

  தற்போது இவர் இந்தி நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஐதராபாத்தில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்த நிதி அகர்வாலும் கேஎல் ராகுலும் நட்பாகப் பழகி வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின.  நிதி அகர்வால் முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யா சாட்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் காதலிப்பதாக வெளியான தகவல்களுக்கு கேஎல் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா?. அது என்ன அவ்வளவு கஷ்டமா? என கேட்டுள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் இருவரும் நண்பர்கள், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எங்கள் நட்பு நான் கிரிக்கெட்டிற்கும், அவர் நடிப்பிற்கும் வரும் முன்பிருந்தே தொடர்கிறது. எனக்கு நண்பர்களுடன் செல்வது பிடிக்கும். அதுவும் நாங்கள் தனியாக செல்லவில்லை. எங்கு சென்றாலும் நண்பர்கள் 3-4 பேர் சேர்ந்து தான் செல்வோம். அப்படியே நான் காதலிப்பதாக இருந்தாலும் உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளிப்படையாக தான் காதலிப்பேன். நான் எனது காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன், எதையும் மறைக்கமாட்டேன்” என கூறினார். 

  ராகுலின் இந்த விளக்கத்தினால் அவரது காதல் குறித்து வெளியான வதந்திகளுக்கு ஒரு திர்வு கிடைத்துள்ளது. இந்த வதந்திக்கு நடிகை நிதி அகர்வாலும் மறுப்பு தெரிவித்துள்ளார். #KLRahul #NidhhiAgerwal