என் மலர்
நீங்கள் தேடியது "தாம்பத்தியம்"
- சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர்.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.
ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும்.
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் நிறைய பேருக்கு, பாலியல் உறவின்போது தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையால் அதிகமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கருத்தரிப்பதற்கு தாம்பத்திய உறவு சரியாக இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் ஏற்படும்.
அவர்களுக்கு உடல் பருமனை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அவர்களுக்குள் ஒரு எதிர்மறை உணர்வு உருவாகும் நிலையில், கண்டிப்பாக தாம்பத்திய உறவில் பிரச்சனை வரும். அப்படி இருக்கும்போது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். மேலும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்துதல், மன அழுத்தத்தை உருவாக்குதல் ஆகியவையும் கருத்தரிப்பதை பாதிக்கும்.
இவை தவிர உடல் பருமனால் பல பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பாதிப்பு சர்க்கரை வியாதி. ஏனென்றால் கொழுப்பு அதிகமானால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு குளுக்கோஸ் தன்மையில் மாறுபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வருவதால், பல நேரங்களில் இந்த பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சனை வரும், ஒருவேளை கருத்தரித்தால்கூட, கரு வளரும்போதும் பிரச்சனை வரும். மேலும் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இந்த பெண்களுக்கு முட்டைகளின் தரம் குறைவாகும்.
ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவை அதிகமாகும்போது, அதில் இருந்து வருகிற சில ரசாயனங்களால் கரு முட்டைகளுக்கான குரோமோசோம்களில் உள்ள இணைப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு, அதனால் கரு முட்டைகளின் தரம் பாதிக்கப்படும்.
சில பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகும். சிலருக்கு இருதய நோய் ஏற்படலாம். மேலும் சில பெண்களுக்கு உடல் பருமன் அதிகமானால் மன அழுத்தம் ஏற்படும். இதுவும் கருமுட்டைகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.
உடல் எடை குறைவாகும்போது அவர்களுக்குள் ஒரு நேர்மறை சிந்தனை வரும். அவர்களின் தாம்பத்திய உறவில் முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலமாக கருத்தரிக்கின்ற வாய்ப்புகள் அதிகமாகும்.
- வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
- புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கு தாம்பத்திய குறைபாடு, ஆர்வமின்மை ஏற்படுவது போன்று பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வமும் இல்லாத நிலை காணப்படும். 'பிரிஜிடிட்டி' என்று மருத்துவ ரீதியாக இது அழைக்கப்படுகிறது. மூளைக்கும், பெண்ணுறுப்பிற்கும் இடையிலான தொடர்பு தடைபடுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
மாதவிடாய்க்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்தால், பாலியல் ஆசையும், இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டமும், வழுவழுப்பான திரவம் சுரப்பதும் குறைகிறது. பிரசவத்திற்குப் பிறகும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலின் ஹார்மோன் அளவுகள் மாறுவதால் தாம்பத்ய விருப்பம் பாதிக்கும்.
புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக செயலிழப்பு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், இதய நோய், மனச்சோர்வு மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகிய நோய் பாதிப்புகள் மற்றும் சில மருந்துகள் பாலியல் ஆசையைக் குறைத்து, உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும். யோனி தசைகள் நீட்சி குறைவாக இருப்பது (டிஸ்பெரூனியா) வலிமிகுந்த தாம்பத்தியத்திற்கு வழிவகுக்கும். நீண்டகால மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோர்வு, கவலைகள் இவை பாலியல் விருப்பமின்மையை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பிரச்சனைகள் தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கலாம்.
வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். இது தாம்பத்ய உறவில் கவனம் செலுத்தவும் அதை அனுபவிக்கவும் உதவும். சைக்கிளிங், நீச்சல், நடைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகள், ஹெகல் பயிற்சிகள் இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தாம்பத்தியத்தின்போது யோனி வறட்சி அல்லது வலி ஏற்பட்டால், இதற்கான மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய், சோற்றுக் கற்றாழை ஜெல் இவைகளை பயன்படுத்தலாம்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், அவகோடா, அடர் சாக்லெட், மாம்பழம், பலாப்பழம், மாதுளம்பழம், பேரீச்சம்பழம், அத்திப்பழம், செவ்வாழைப்பழம், எள்ளுருண்டை, வெந்தயக்களி, முட்டை, கோழிக்கறி, கடல் உணவுகள், பால்பொருட்கள், முருங்கைக்காய், புடலங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பசலைக்கீரை, முருங்கைக்கீரை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ சிகிச்சைகள்
* சதாவரி லேகியம் காலை, இரவு இரு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.
* குமரி லேகியம் காலை, இரவு ஐந்து கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
* மலச்சிக்கல் இருந்தால் கடுக்காய் பொடியை இரவு நேரத்தில் 1 கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
- மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் பண்ண முடியவில்லை.
- உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது, அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. தற்போதுள்ள வேலை, மனஅழுத்தம், உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது.
தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன்-மனைவி உறவை பிணைக்கக்கூடிய முக்கியமான ஒன்று. உங்களைப்போன்று பலர் இந்த பாதிப்பினால் அவதிப்படுகிறார்கள். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
அதற்கான சித்த மருந்துகள்:
1) சாலாமிசிரி லேகியம் ஒரு டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.
2) அமுக்கரா லேகியம் காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
3) பூமி சர்க்கரை கிழங்கு பொடி அல்லது அமுக்கரா பொடி ஒரு டீஸ்பூன், நாக பற்பம் 100 மி.கி., பூரண சந்திரோதயம் 100 மி.கி. கலந்து காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.
சிறப்பான தாம்பத்தியத்திற்கு உதவும் உணவுகள்: சைவ உணவுகளில் கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாக்லேட், கருப்பு திராட்சை, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி. அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், முட்டை, பால், வெண்ணெய், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன். பழங்களில்- நேந்திரம், செவ்வாழை, அவகோடா, பேரிச்சை, அத்தி, மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள். இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும். முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் ஏராளம்.
- இதனை இயற்கை வயகரா என்றும் கூறலாம்.
முள்வகை செடிதானே, கற்றாழை என்று நாம் வெறுமனே கடந்து போய் விடமுடியாது. கற்றாழையில் சோற்று கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் ஏராளம். ஆங்கிலத்தில் ஆலோவேரா என்று அழைக்கப்படும் சோற்றுக் கற்றாழை செடியிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் இன்று உலக அளவில் பல நூறு கோடி ரூபாய்களில் வர்த்தகமாகிறது.
அழகு சாதன பொருட்கள்
சோற்றுக் கற்றாழையின் வேர் மற்றும் அதன் சதைப் பிடிப்பான இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகின்றன. குறிப்பாக கற்றாழை இலைகளின் உள்ளே இருக்கும் ஜெல் என்படும் கூழில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்கள் உலக அளவில் சந்தை மதிப்பு மிக்கதாக உள்ளன. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் கற்றாழை ஜெல் மேம்படுத்துகிறது. சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றிலும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.
இது உடல் சூட்டைத் தணித்தல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பை தடுப்பது, பசியின்மை, தீ காயங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற கற்றாழை பயன்படுகிறது.
தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. கற்றாழையின் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து இட்லி குக்கர் அல்லது பானையில், பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைத்து, பின்னர் அதனை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். தாம்பத்தியம் இனிமையாகும். இதனை இயற்கை வயகரா என்றும் கூறலாம்.
கற்றாழையை பயன்படுத்தும் போது 7 முதல் 10 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
மருத்துவ குணம் நிறைந்த சோற்றுக்கற்றாழையை வீட்டில் வளர்ப்போம்.
- திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள்.
- தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும்.
சர்வதேச அளவில் இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மட்டுமின்றி திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதற்கு மருந்துகளைத்தாண்டி உடல், மனம், உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியமாகும். இதுகுறித்து விரிவான விளக்கத்தைப்பார்ப்போம்.
மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது. அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது.
பசி, தாகம், ஓய்வு, தூக்கம் இவைகளைப் போன்று தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இல்லற சுகத்திற்கு வயது ஒரு தடை அல்ல. மனமும், உடலும் ஒத்துழைத்தால் எந்த வயதிலும் இந்த சுகத்தை அனுபவிக்கலாம்.
பல ஆண்களுக்கு ஆரம்பகாலத்தில் தாம்பத்தியம் தொடர்பான அச்சம், சந்தேகங்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு தாம்பத்ய வாழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், நாளாக நாளாக தாம்பத்தியத்தின் திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மன ரீதியாக பாதிப்பும், தொடர்ந்து உடலிலும் பிரச்சினைகள் வருகிறது.
ஆண்களின் பிரச்சினைகளில் மிக முக்கியமானது விறைப்புத்தன்மை குறைபாடு. இது நரம்பு, ஹார்மோன், உடல் நலக்குறைவு மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது.
சில அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், ஹார்மோன்கள் இல்லற வாழ்வில் திருப்தியைத் தருபவை. அதுதொடர்பான உணவுகள், பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.
எல்-ஆர்ஜினின் அமினோ அமிலம்: இது ரத்தத்திலுள்ள நைட்ரிக் ஆக்சைடு அளவை சீராக்கி ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த அடைப்புகளை நீக்குகிறது. இந்த சத்து சைவ உணவுகளில் பீட்ரூட், பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசிகளில் உள்ளது. அசைவ உணவுகளில் கோழி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மீன் வகைகளில் சூரை மீன், கணவாய், இறால், நண்டு, மற்றும் முட்டை, பால் இவைகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது.
எல்- கார்னிடைன்: இதுவும் ஒருவகை அமினோ அமிலம் ஆகும். இது ஆண்மை எழுச்சிக்கு காரணமானது. இந்த சத்து, சிகப்பு இறைச்சி வகைகள், கோழி இறைச்சி, பால், வெண்ணெய், முட்டை, சூரை மீன், சுறா மீன், மத்திச் சாளை, கணவாய், பீட்ரூட், பூசணி விதைகளில் உள்ளது.
எல் சிட்ருலின்: இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகக்கூடியது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தர்ப்பூசணி, ஆரஞ்சு, சாக்லேட், எலுமிச்சை பழங்களில் இது அதிகமாக உள்ளது.
எல் டைரோசின்: இந்த அமினோ அமிலம் அதிகரிக்கும்போது உடலில் 'டோபமைன்' அளவும் கூடுகிறது. இது மனதுக்கும், உடலுக்கும், உற்சாகம், நம்பிக்கையை தருகிறது. இது தன்னம்பிக்கைக்குரிய ஹார்மோன் ஆகும். பூசணி விதைகள், எள் இவற்றில் இந்தச்சத்து போதுமான அளவு உள்ளது.
புரோமிலென்: இந்த என்சைம் வாழைப்பழத்தில் அதிகளவு உள்ளது. இது மனதில் தாம்பத்ய ஆசையை அதிகரிக்கிறது. பழங்களில் நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம் சிறந்தது.
அவகோடா: இது விதைப்பை மரம் (Testicle Tree) என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரதங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
லைக்கோபீன்: இது தக்காளியில் உள்ள முக்கியமான அமினோ அமிலம், புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம், வளர்ச்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு தக்காளியில் உள்ள லைக்கோபீன் ஒரு அருமருந்து.
ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்: இவை உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிளாக்ஸ் விதைகள், பாதாம், மத்திச் சாளை மீன், சூரை மீன், கணவாய் மீன் போன்றவற்றில் ஒமேகா அமிலங்கள் அதிகளவில் உள்ளது.
உணவுகளில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, கேரட், பீட்ரூட், முருங்கை காய், முருங்கை கீரை, முருங்கை பூ-விதை, தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு, கடல் உணவுகளில் சூரை மீன், கணவாய், சிப்பி, நண்டு, வாளைமீன், சுறா, இறைச்சி வகைகளில் நாட்டுக்கோழி, வான்கோழி, கோழி முட்டை போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
கருப்புத் திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள 'ரெஸ்வெட்ரால்' என்ற தாவர வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி ரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்கிறது.
வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் பிரச்சினை வரலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.
உணவு வகைகளில் மாப்பிள்ளை சம்பா அரிசி, கறுப்புக் கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம், புடலங்காய், கருப்பட்டி, பாதாம், முந்திரிபருப்பு, கேரட், பீட்ரூட், அறுகீரை, பசலைக்கீரை, பேரிச்சம் பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வேர்க்கடலை, முட்டை, நாட்டுக்கோழி, கடல் உணவுகள் போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கும் சிறந்த உணவுகள் ஆகும்.
சித்த மருந்துகள்: சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு இவைகள் நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.
சித்த மருந்துகளில் அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதயம் 100 மி.கி., நாகப்பற்பம் 100 மி.கி., முத்து பற்பம் 100 மி.கி. இவைகளை பால் அல்லது தேனில் மூன்று வேளை சாப்பிட வேண்டும். சாலாமிசிரி லேகியம் 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி: இதில் சைக்கிளிங் தான் முதலிடம் வகிக்கிறது. நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு தசைகள் மற்றும், ஆசன பகுதி தசைகளான இஸ்கியோகவர்னோசஸ், பல்போகவர்னோசஸ் தசைகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சைக்கிள் ஓட்டுதல் நல்ல பலனைத் தரும்.
ஹெகல் பயிற்சி (Hegel Exercise). இது மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சி. இடுப்பின் இரு பக்கமும் கைகளை வைத்து உட்கார்ந்து எழும்புதல், இதை பத்து முறை செய்யலாம். மல்லாந்து படுத்து ஒவ்வொரு கால்களையும் வயிறு வரை மடக்கி பயிற்சி செய்வது, இதையும் பத்து முறை செய்ய வேண்டும். அடுத்து படுத்தபடியே இரு கால்களையும் முடிந்த வரை மேலே தூக்குவது. இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். இதனால் ஆண் உறுப் புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இடுப்பு தசைகள் உறுதியடையும். மற்றும் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் குறைந்து நன்றாக சிறுநீர் கழியும்.
மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மைகள் நீங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவேண்டும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. மனதையும், உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்தால் எதுவும் சாத்தியமே.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- தேனிலவு காலம் தம்பதிகளை பொறுத்தவரையில் மிக மகிழ்ச்சியானது.
- பெண்கள் தேனிலவு காலத்தில் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
திருமணமாகும் எல்லா பெண்களுக்குமே தேனிலவு கனவு ஒன்று இருக்கும். திருமணமானதும் அவர்களது தேனிலவு காலம் தொடங்கிவிடுகிறது. தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள தேனிலவு நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களை தனிமையில் பயணிக்க அனுமதித்துவிடுவார்கள். அவர்கள் சுதந்திர பறவைகளாக விரும்பிய இடங்களுக்கெல்லாம் சிறகடித்து பறந்து, மகிழ்ச்சியாக தாம்பத்ய உறவை அமைத்துக்கொள்வார்கள்.
வெளி இடங்களுக்கு தனிமையில் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காத ஜோடிகளுக்கும் தேனிலவு காலம் உண்டு. அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அந்த நாட்களை கொண்டாடுகிறார்கள். தேனிலவு காலத்தின் சிறப்பு என்னவென்றால் அப்போது புதுமணத்தம்பதிகளின் உடலும், உள்ளமும் சங்கமிக்கும். தாம்பத்ய ஆர்வமும் மேலோங்கி நிற்கும். அப்போது அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக பெண்கள் தேனிலவு காலத்தில் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
தேனிலவு நாட்களில் பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும் பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அந்த பாதிப்பிற்கு 'ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்' என்று பெயர். சுகாதாரமற்ற முறையில் கணவரோடு தாம்பத்ய தொடர்பில் ஈடுபட்டால் இந்த பாதிப்பு தோன்றும். பெண்களின் உறுப்பு பகுதியில் வலி, எரிச்சல் ஏற்படுவது இதன் அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வினை இது ஏற்படுத்தும். ஆனால் சிறுநீர் பிரிந்து வெளியேறாது. சிலருக்கு சிறுநீரில் லேசாக ரத்தமும் வெளியேறலாம்.
சிறுநீர் பரிசோதனையில் இந்த நோயின் தாக்குதல் தன்மையை கண்டுபிடிக்கலாம். பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததும், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டியதிருக்கும். சரியான சிகிச்சை பெறாவிட்டால், கிருமித் தொற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.
தேனிலவு காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்தரங்க சுத்தம் மிக அவசியம். தாம்பத்ய உறவு முடிந்ததும் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உறவுக்கு முன்பும்-பின்பும் இருவருமே அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தேனிலவு காலத்தில் காபி, டீ, குளிர்பானங்கள் பருகுவதை தவிர்ப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்து, அடக்கி வைக்காமல் சிறுநீர் கழிப்பதும் அவசியம்.
தேனிலவு காலம் தம்பதிகளை பொறுத்தவரையில் மிக மகிழ்ச்சியானது. அந்த மகிழ்ச்சியை அவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.
- மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
- மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.
மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.
நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.
ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.
மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.
அந்த 3 நாள்களில் உடலுறவு கொண்டால் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.
கால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.
எனினும், "மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
- சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம். இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.
960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.
சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது.
ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான். எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.
-சிவசங்கர்
- அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
- கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இது குறித்து ஜன்னல் ஆப் செக்ஸ்வல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியலில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பாலியல் நல்வாழ்வில் உடலில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். மீதி பெண்கள் ஆசை தூண்டுதல் உணர்வு மற்றும் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
- சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும்.
- ரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது
காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.

'பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். வாய்ப்புகள் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும். 21 நாள்கள் சுழற்சியில் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில், அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கன்சீவ் ஆக வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம். முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் கவனம்..!
- மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீங்கும்.
- மனதுக்கும் உற்சாகத்தை தரும்.
தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
எல்-ஆர்ஜினின், எல்-கார்னிடைன், எல்.சிட்ருலின், எல்.டைரோசின் ஆகிய அமினோ அமிலங்கள், புரோமிலென் என்ற என்சைம், லைக்கோபீன், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு பயன்தரும். அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகள்:-

காய்கறிகள்:
தக்காளி, கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை

பழங்கள்:
நேந்திரன் வாழை, செவ்வாழை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.

விதைகள்:
பூசணி விதைகள், எள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, கடற்பாசிகள். சாக்லேட்டுகள், கருப்பு திராட்சை

அசைவ உணவுகள்:
கோழி இறைச்சி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மத்திச்சாளை, சூரை மீன், கணவாய், இறால், நண்டு, முட்டை, பால்

அரிசி:
சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி
மூலிகைகள்:
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை போன்றவை நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.
சித்த மருந்துகளில் மதன காமேஸ்வர லேகியம், சாலாமிசிறி லேகியம் ஆகியவற்றை தலா 1-2 கிராம் வீதம் காலை, இரவு இரு வேளை சாப்பிட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவு வகைகள், மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உற்சாகம் பெருகும். ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராகும். மன உணர்வுகள் அதிகரித்து, தாம்பத்ய குறைபாடு நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.






