என் மலர்

  நீங்கள் தேடியது "physical relationship"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுடன், மன அழுத்தம் இல்லாமல், கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டியது அவசியம்.
  கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் - மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த்தனை பண்ண வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  சமூகம் தழைத்தோங்க ஆண் - பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும்.

  கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்… விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

  கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன.  அதனால கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்.

  கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.

  சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும்.

  கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறிமுறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் தாம்பத்தியம் கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
  செக்ஸ் மீதான ஆசையும், அது பற்றிய அறிவும் மட்டும் இருந்தால் போதாது. அதில் ஈடுபட ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது அவசியம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

  சமீபத்திய உலக அளவிலான ஆன்லைன் சர்வே ‘செக்ஸில் ஈடுபடும் போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்’ எனச் சொல்கிறது. கடின உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறையே பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி வர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 58 சதவிகித மக்களுக்கு உடலுறவின் போது ஒரு முறையாவது முதுகு வலியோ, இடுப்புப் பகுதியில் வலியோ ஏற்படுகிறது என அறிவித்து இருக்கிறது.

  முதுகுத் தசைகளில் ஏற்படும் அழுத்தமும், தசைநார்கள் பலவீனமடைவதும் 80 முதல் 90 சதவிகிதம் முதுகுவலிக்கு அடிப்படை காரணம். இதனால் முதுகு தண்டுவடத்தினுள் பிரச்சனைகள் எதுவுமிருக்காது. அதனால் கவலைப்படத் தேவையில்லை. முதுகுத் தசைகளை வலுப்படுத்தினால் போதுமானது. முதுகுத் தசைகளை நல்ல நிலையில் வைக்கும் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.  ஒரு பிசியோதெரபிஸ்டின் ஆலோசனையின் படி முதுகு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இன்னும் நல்லது. முதுகுதசைகள் வலுவாக இருந்தாலே முதுகு தண்டுவடத்தை சரியான இடத்தில் நிறுத்தி அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். Core muscles என ஆங்கிலத்தில் குறிப்பிடும் முதுகு, இடுப்பு, வயிற்றின் முக்கிய தசைகளை வலுவாக்க வேண்டும். இதன் மூலம் உடலுறவில் எந்த வலியும் இல்லாமல் சிறந்த முறையில் ஈடுபட முடியும்.

  ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். முதுகு வலியை ஏற்படுத்தாத நிலைகளில் மட்டுமே செக்ஸில் ஈடுபட வேண்டும். தீவிரமாக இயங்காமல் கொஞ்சம் மெதுவாக இயங்கினால் நீடித்த இன்பம் பெறலாம். படுக்கையானது கடினமான மெத்தையால் அமைந்திருக்க வேண்டும்.

  படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை அதிகமாக்கும். உடலுறவின் போது மூட்டுவலி வராமல் இருக்க மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து இயங்க வேண்டும். முதுகில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இயங்க பழகிக்கொள்ள வேண்டும். யோகா, பிசியோதெரபி பயிற்சி எடுத்து முதுகை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் நலமுடன் இருக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.
  ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்திய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்திய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும்.

  தாய்மை காலத்தில் கணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்திய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.

  பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம். செக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

  கர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்தியம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.

  கர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.

  இரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.

  பெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.  தாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.

  உடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.

  தான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.

  தாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.

  குழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.

  அந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

  பெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  தாம்பத்தியத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்தியம் தொடரலாம். 
  ×